×

மதுபோதையில் பொதுமக்கள் மீது காரை ஏற்றிய வாலிபர் – பதபதைக்கும் வீடியோ

பெங்களூரில் சாலையோரத்தின் நடைமேடையில் காரை ஏற்றி பொதுமக்கள் மீது மோதிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று மதியம் ஒரு கடை அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சாலையை விட்டு விலகிய கார் நடைமேடையின் மீது ஏறி அந்த கூட்டத்தில் பாய்ந்தது. இதில், அங்கு நின்றிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிலர் காயமடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் காரை ஓட்டி வந்தது யார் என பார்த்த போது
 
மதுபோதையில் பொதுமக்கள் மீது காரை ஏற்றிய வாலிபர் – பதபதைக்கும் வீடியோ

பெங்களூரில் சாலையோரத்தின் நடைமேடையில் காரை ஏற்றி பொதுமக்கள் மீது மோதிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று  மதியம் ஒரு கடை அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சாலையை விட்டு விலகிய கார் நடைமேடையின் மீது ஏறி அந்த கூட்டத்தில் பாய்ந்தது. இதில், அங்கு நின்றிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிலர் காயமடைந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் காரை ஓட்டி வந்தது யார் என பார்த்த போது அந்த நபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து அவர்கள் போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News