×

அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை துரத்தி அடித்த தம்பதி – அதிர்ச்சி வீடியோ

Old couple fight with gangster in nellai video – திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க வந்த முகமூடி கொள்ளையர்களிடம் வயதான ஒரு தம்பதி சண்டை போட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையம் பகுதி கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் நேற்று இரவு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது 2 கொள்ளையர்கள் அங்கே வந்தனர். அரிவாளை காட்டி மிரட்டிய அவர்களை சண்முகவேலும், அவரின் மனைவியும் அங்கிருந்த பொருட்களை வைத்து தாக்கினர். வயதானவர்கள்தானே
 
அரிவாளுடன் வந்த கொள்ளையர்களை துரத்தி அடித்த தம்பதி – அதிர்ச்சி வீடியோ

Old couple fight with gangster in nellai video – திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க வந்த முகமூடி கொள்ளையர்களிடம் வயதான ஒரு தம்பதி சண்டை போட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் பகுதி கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் நேற்று இரவு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது 2 கொள்ளையர்கள் அங்கே வந்தனர். அரிவாளை காட்டி மிரட்டிய அவர்களை சண்முகவேலும், அவரின் மனைவியும் அங்கிருந்த பொருட்களை வைத்து தாக்கினர்.

வயதானவர்கள்தானே சுலபமாக மிரட்டி கொள்ளையடித்து சென்று விடலாம் என்கிற நோக்கத்தில் வந்த கொள்ளையர்கள், அவர்களின் தாக்குதலை தாக்கு பிடிக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒரே நாளில் சண்முகவேலும், அவரின் மனைவியும் ஒரே நாளில் ஹீரோ ஆகி விட்டனர்.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து அவர்களை பாராட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News