×

ஒரு கேங்லீடருக்கு வந்த சோதனை : பெண் வேடம் போட்டு தப்ப முயன்ற கைதி (வீடியோ)

Brazil gang leader attempt escape like girl – சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேங்ஸ்டர் ஒருவர் அவரது மகள் போல் வேடமிட்டு தப்ப முயன்று தோல்வி அடைந்த சுவாரஸ்யமான சம்பவம் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜானரியோ சிறை உள்ளது. இங்கு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் க்ளவினோ டா சில்வா என்கிற கேங் லீடரும் அடைக்கப்பட்டிருந்தார். இவரை பார்க்க இவரது மகள் சமீபத்தில் சிறைக்கு சென்றார்.
 
ஒரு கேங்லீடருக்கு வந்த சோதனை : பெண் வேடம் போட்டு தப்ப முயன்ற கைதி (வீடியோ)

Brazil gang leader attempt escape like girl – சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேங்ஸ்டர் ஒருவர் அவரது மகள் போல் வேடமிட்டு தப்ப முயன்று தோல்வி அடைந்த சுவாரஸ்யமான சம்பவம் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜானரியோ சிறை உள்ளது. இங்கு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பலரும் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் க்ளவினோ டா சில்வா என்கிற கேங் லீடரும் அடைக்கப்பட்டிருந்தார். இவரை பார்க்க இவரது மகள் சமீபத்தில் சிறைக்கு சென்றார்.

அதன் பின் அவரது மகள் போலவே முகம், தலை முடி விக், ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் அணிந்து ஒருவர் பதட்டத்துடன் வெளியே செல்ல முயன்றார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சிறை அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போதுதான் சில்வா தனது மகள் போல வேடமிட்டு வெளியே தப்ப முயன்றது தெரியவந்தது.

தனது மேக்கப்பை கலைத்து சில்வா ஆணாக மாறுவதை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். சில்வாவை பாதுகாப்பு அதிகம் நிறைந்த மற்றொரு சிறைக்கு மாற்ற சிறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். மேலும், அவர் தப்பிக்க அவரது மகள் உதவினாரா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News