×

விஜய் பாடும் ‘வெறித்தனம்’ பாடல் புரமோ வீடியோ – பிகில் அப்டேட்

விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நாளை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ‘வெறித்தனம்’ பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை கவிஞர் விவேக் எழுத விஜயே பாடியுள்ளார். இந்நிலையில், இந்த பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இப்படத்தின்
 
விஜய் பாடும் ‘வெறித்தனம்’ பாடல் புரமோ வீடியோ – பிகில் அப்டேட்

விஜய் நடிக்கும் பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நாளை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ‘வெறித்தனம்’ பாடல் நாளை வெளியாகவுள்ளது. இப்பாடலை கவிஞர் விவேக் எழுத விஜயே பாடியுள்ளார்.

இந்நிலையில், இந்த பாடல் பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘ரகுமான் இயக்கத்தில் தளபதி பாடிய எனக்கு மிகவும் பிடித்த பாடல். தயாராக இருங்கள். நாளை அனைத்து சாதனையும் முறியடிக்க போகிறோம்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News