×

அடிபட்ட முதியவரை தோளில் தூக்கி சென்ற காவல் அதிகாரி – வைரல் வீடியோ

Police man carried old man on his shoulder – காலில் அடிபட்ட முதியவரை தோளில் தூக்கி சென்ற காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஹைதராபாத் கே.எல்.நகர் பகுதியில் மழைநீர் சாலையெங்கும் பெருக்கெடுத்து ஓடி வருகிறார். இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அத சரிசெய்யும் பணியில் மாநகர பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகமல்லு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் ஒரு வாலிபர் ஒரு முதியவரை
 
அடிபட்ட முதியவரை தோளில் தூக்கி சென்ற காவல் அதிகாரி – வைரல் வீடியோ

Police man carried old man on his shoulder – காலில் அடிபட்ட முதியவரை தோளில் தூக்கி சென்ற காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ஹைதராபாத் கே.எல்.நகர் பகுதியில் மழைநீர் சாலையெங்கும் பெருக்கெடுத்து ஓடி வருகிறார். இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அத சரிசெய்யும் பணியில் மாநகர பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகமல்லு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் ஒரு வாலிபர் ஒரு முதியவரை ஏற்றிக்கொண்டு வந்தார். அவருக்கு காலில் அடி பட்டு கட்டுப் போட்டிருந்தார். அவர்களால் தண்ணீரை கடக்க முடியவில்லை. இதைக்கண்ட இன்ஸ்பெக்டர் நாகமல்லு அந்த முதியவரை தனது தோளில் தூக்கி சென்று நீரில்லாத இடத்தில் இறக்கி விட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News