×

இறந்த பிச்சைக்காரர் பையில் ரூ.2 லட்சம்.. வங்கியில் ரூ. 7.5 கோடி

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் எனும் ஊரில் இறந்து கிடந்த ஒரு பிச்சைக்கார பாட்டியின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெய்ரூட் நகரத்தில் உள்ள தெருக்களில் பல வருடங்களாக ஒரு மூதாட்டி பிச்சை எடுத்து வருகிறார். அவரது உடலில் கை, கால்கள் இயங்காது என்பதால் பிச்சையாக போடும் சில்லரை மற்றும் நோட்டுகளை வாயால் கவ்வி தனது பைக்குள் அவர் போடுவது வழக்கம். கடந்த வாரம் ஒருவர் பிச்சை போடும் போது அவரது உடலில்
 
இறந்த பிச்சைக்காரர் பையில் ரூ.2 லட்சம்.. வங்கியில் ரூ. 7.5 கோடி

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் எனும் ஊரில் இறந்து கிடந்த ஒரு பிச்சைக்கார பாட்டியின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ரூட் நகரத்தில் உள்ள தெருக்களில் பல வருடங்களாக ஒரு மூதாட்டி பிச்சை எடுத்து வருகிறார். அவரது உடலில் கை, கால்கள் இயங்காது என்பதால் பிச்சையாக போடும் சில்லரை மற்றும் நோட்டுகளை வாயால் கவ்வி தனது பைக்குள் அவர் போடுவது வழக்கம்.

கடந்த வாரம் ஒருவர் பிச்சை போடும் போது அவரது உடலில் எந்த சலனும் இல்லை. எனவே அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவரிடம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தது தெரியவந்தது. அவரது பைகளை போலீசார் சோதனை செய்த போது, இந்திய மதிப்பில் ரூ.2.24 லட்சம் பணம் இருந்தது. அதேபோல், பையில் இருந்த வங்கி கணக்குப் புத்தகத்தில் ரூ.7.50 கோடி கையிருப்பு இருந்தது. அந்த புத்தகத்தில் அவரின் பெயர் பாத்திமா ஒத்மான் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரை பற்றிய தகவல்களை போலீசார் திரட்டிய போது, அவர் பார்பிர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு அங்கு உறவினர்கள் இருப்பதும் தெரியவந்தது. இவரின் குடும்பத்தில் இவரின் தாய், 2 சகோதரர்கள் மற்றும் 5 தங்கைகள் உள்ளனர். பாத்திமா பிச்சை எடுத்துக்கொண்டிருப்பதும், அவரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதும் தங்களுக்கு தெரியாது என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். பாத்திமாவின் உடலை அவர்கள் பெற்றுக்கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்த தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News