×

2 கத்திகளால் 59 முறை மனைவியை குத்திய கொடூர கணவன்…

Man Stabbed wife – மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் அவரை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது., இங்கிலாந்தில் வசித்து வருபவர் லாரன்ஸ் பிராண்ட்(47). இவரின் மனைவி ஏஞ்சலா மிட்டல்(41). இவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஏஞ்சலாவை லாரன்ஸ் கத்தியால் பல முறை குத்தியுள்ளார்.
 
2 கத்திகளால் 59 முறை மனைவியை குத்திய கொடூர கணவன்…

Man Stabbed wife – மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் அவரை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.,

இங்கிலாந்தில் வசித்து வருபவர் லாரன்ஸ் பிராண்ட்(47). இவரின் மனைவி ஏஞ்சலா மிட்டல்(41). இவர் இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஏஞ்சலாவை லாரன்ஸ் கத்தியால் பல முறை குத்தியுள்ளார். அப்போது அந்த கத்தி உடைந்து விட்டது. அப்போதும் ஆத்திரம் தீராமல் சமையல் அறைக்கு சென்ற லாரன்ஸ் வெறொரு கத்தியை எடுத்து வந்து ஏஞ்சலாவை மீண்டும் குத்தியுள்ளார். மொத்தம் 59 முறை அவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் உயிருக்கு போராடிய அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். எனவே, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தன்னை சந்தேகப்பட்டுக் கொண்டே இருந்ததால் கோபத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டதாக லாரன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவருக்கு 16 வருடம் மற்றும் 8 மாதம் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தற்போது தண்டனை வழங்கியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News