×

குழந்தை வேண்டாமா?.. காண்டம் தேவையில்லை.. ஒரு கம்மல் போதும்….

Jewells for ban pregnancy – பெண்கள் கருவுறுவதை தவிர்க்க ஒரு புதிய கம்மலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். பொதுவாக கருவுறுவதை தவிர்க்க ஆண்கள் ஆணுறையை பயன்படுத்துவார்கள். அல்லது பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். ஆனால், அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் அது உடல் நலத்தை பாதிக்கும். அதேபோல், ஆணுறைகளை பயன்படுத்துவதை பல ஆண்கள் அசௌகர்யமாக கருதுகின்றனர். எனவே, எளிய முறையில் கருவுறுவதை தடுக்கும் வழிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பகுதியை சேர்ந்த
 
குழந்தை வேண்டாமா?.. காண்டம் தேவையில்லை.. ஒரு கம்மல் போதும்….

Jewells for ban pregnancy – பெண்கள் கருவுறுவதை தவிர்க்க ஒரு புதிய கம்மலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

பொதுவாக கருவுறுவதை தவிர்க்க ஆண்கள் ஆணுறையை பயன்படுத்துவார்கள். அல்லது பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். ஆனால், அடிக்கடி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் அது உடல் நலத்தை பாதிக்கும். அதேபோல், ஆணுறைகளை பயன்படுத்துவதை பல ஆண்கள் அசௌகர்யமாக கருதுகின்றனர். எனவே, எளிய முறையில் கருவுறுவதை தடுக்கும் வழிகளை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குழந்தை வேண்டாமா?.. காண்டம் தேவையில்லை.. ஒரு கம்மல் போதும்….

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பகுதியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, கருத்தடை ஹார்மோன்கள் கலந்த கம்மல், மோதிரங்கள், கை கடிகாரம் மற்றும் பெண்கள் கழுத்தில் அணியும் நக்லஸ் ஆகியவற்றை தயாரித்துள்ளனர். அதை அணிந்து கொள்ளும்போது அதில் உள்ள ஹார்மோன் தோல் வழியாக ரத்தத்தில் ஊடுருவி, பெண்கள் கருத்தரிக்காமல் தடுத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதேசமயம் அந்த நகைகளை நீண்ட நாட்கள் அணிந்திருக்க முடியாது. ஒரிரு நாட்கள் மட்டுமே அணிந்து கொள்ள முடியும். அதன்பின் அந்த மருந்துகள் காலாவதி ஆகிவிடும். எனவே, நீண்ட நாட்கள் நீடிக்கும் வகையில் தற்போது ஆராய்ச்சி நடந்து வருகிறது. ஆனாலும், இந்த கண்டுப்பிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News