×

3 வயது மகளை காரில் வைத்து எரித்த கொடூர தந்தை – அதிர்ச்சி செய்தி

Father killed daughter – தனது மகளை காரில் வைத்து எரித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் குயீன்ஸ் நகரில் வசிப்பவர் மார்ட்டின். இவரின் மனைவி செரோன் கோல்மன். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆகிவிட்டது. அதன்பின் அவர்களின் 3 வயது பெண் குழந்தை யாரிடம் வளர்வது என்கிற வழக்கு நடைபெற்றது. மார்ட்டின் மன நலம் குன்றியர் போல் நடந்து கொள்கிறார். எனவே, அவரால் என் குழந்தைக்கு ஆபத்து நேரும் என
 
3 வயது மகளை காரில் வைத்து எரித்த கொடூர தந்தை – அதிர்ச்சி செய்தி

Father killed daughter – தனது மகளை காரில் வைத்து எரித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் குயீன்ஸ் நகரில் வசிப்பவர் மார்ட்டின். இவரின் மனைவி செரோன் கோல்மன். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆகிவிட்டது. அதன்பின் அவர்களின் 3 வயது பெண் குழந்தை யாரிடம் வளர்வது என்கிற வழக்கு நடைபெற்றது.

மார்ட்டின் மன நலம் குன்றியர் போல் நடந்து கொள்கிறார். எனவே, அவரால் என் குழந்தைக்கு ஆபத்து நேரும் என செரோன் நீதிமன்றத்தில் மன்றாடினார். ஆனாலும், அதைப் பொருட்படுத்தாமல் குழந்தை தந்தையுடனே வளரட்டும் என தீர்ப்பளித்தார்.

3 வயது மகளை காரில் வைத்து எரித்த கொடூர தந்தை – அதிர்ச்சி செய்தி

இந்நிலையில், ஒரு இடத்தில் மார்ட்டினின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், மார்ட்டின் எந்த காயமும் இன்றி தப்பிவிட்டார். ஆனால், காரின் பின்பகுதியில் அமர்ந்திருந்த அவரின் மகள் பயங்கர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

ஆனால், இது விபத்து போல் தெரியவில்லை தீயணைப்பு போலீசார் கருதினர். ஏனெனில், சிறுமி கார் சீட்டுடன் நன்றாக கட்டப்பட்டிருந்தார். மேலும், காரின் கதவு யாரும் திறக்கமுடியாத படி உள்புறமாக சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன் மனைவிக்கு போன் செய்த மார்ட்டின் இனிமேல் உன் மகளை நீ காணவே முடியாது எனக் கூறியுள்ளார்.

எனவே, இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News