×

பணத்துக்காக இப்படியா? – 10 வயது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…

Minor girl wedding – பணத்துக்காக தனது 10 வயது மகளை 40 வயதுக்கும் மேற்பட்ட ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். உலகம் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்திருந்தாலும், சில நாடுகளில் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையாமலே இருக்கிறார்கள். இதில், குழந்தைகள் திருமணமும் ஒன்று. 21 வயதுக்கு மேலுள்ள பெண்களையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே சில மாநிலங்களை அது கடைபிடிக்கப்படுவதில்லை. இந்நிலையில், பாகிஸ்தானில்
 
பணத்துக்காக இப்படியா? – 10 வயது மகளை 40 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…

Minor girl wedding – பணத்துக்காக தனது 10 வயது மகளை 40 வயதுக்கும் மேற்பட்ட ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

உலகம் எவ்வளவுதான் நாகரீகம் அடைந்திருந்தாலும், சில நாடுகளில் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடையாமலே இருக்கிறார்கள். இதில், குழந்தைகள் திருமணமும் ஒன்று. 21 வயதுக்கு மேலுள்ள பெண்களையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என சட்டம் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே சில மாநிலங்களை அது கடைபிடிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு குழந்தை திருமணம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் ஷிகார்பூர் நகரத்தில் வசித்து வரும் முகமது சோமர் என்பது திருமணம் செய்து கொள்ள விரும்பி தரகர் மூலம் பெண் தேடியுள்ளார்.

இந்நிலையில், 10 வயதான தனது மகளுக்கு 17 வயது எனக்கூறி முகமதுக்கு திருமணம் செய்து கொடுப்பதாக அந்த தரகரிடம் கூறியுள்ளார். மேலும், அதற்காக ரூ.2.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் டீல் பேசியுள்ளார். இந்த டீலுக்கு முகம்மது ஒத்துக்கொள்ள திருமணமும் நடந்துள்ளாது.

ஆனால், இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் சிறுமி அழுது கொண்டே இருக்க, இதுபற்றி சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் முகம்மதுவை கைது செய்தனர். மேலும், சிறுமியின் தந்தையையும், தரகரையும் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News