×

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து – இந்தியப் படங்களுக்கு பாகிஸ்தான் தடை !

இந்தியப் படங்களுக்கு குறிப்பாக பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு உள்ளது. பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி ஆகியோருக்கு அங்கு பாகிஸ்தான் நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் உண்டு. அதனால் பாக் ரசிகர்களைக் கவர்வதற்காக பாலிவுட் படங்களில் இப்போது பாகிஸ்தான் நடிகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அதனால் இந்தியாவில் ரிலிஸாகும் அதே நாளில் பாகிஸ்தானிலும் பாலிவுட் படங்களும் ரிலீஸாவது வாடிக்கையாகவுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்துள்ளதை அடுத்து இந்தியப் படங்களுக்குப் பாகிஸ்தான்
 
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து – இந்தியப் படங்களுக்கு பாகிஸ்தான் தடை !

இந்தியப் படங்களுக்கு குறிப்பாக பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் நல்ல வரவேற்பு உள்ளது. பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஸ்ரீதேவி ஆகியோருக்கு அங்கு பாகிஸ்தான் நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் உண்டு. அதனால் பாக் ரசிகர்களைக் கவர்வதற்காக பாலிவுட் படங்களில் இப்போது பாகிஸ்தான் நடிகர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அதனால் இந்தியாவில் ரிலிஸாகும் அதே நாளில் பாகிஸ்தானிலும் பாலிவுட் படங்களும் ரிலீஸாவது வாடிக்கையாகவுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்துள்ளதை அடுத்து இந்தியப் படங்களுக்குப் பாகிஸ்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையைச் சேர்ந்த ஃபர்டஸ் ஆஷிக் அவான் ‘எந்த விதமான இந்தியத் திரைப்படங்கள், டிராமா, சீரியல்களும் இனி பாகிஸ்தானில் திரையிடப்படாது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியப் படங்களுக்குப் பாகிஸ்தான் தடை விதிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் புல்வாமா தாக்குதலின் போதும் இதுபோல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல அப்போதுஇந்திய சினிமாவில் பணிபுரியும் பாகிஸ்தான் கலைஞர்களையும் புறக்கணிக்க வேண்டும் என இந்திய கலைஞர்கள் குரல் எழுப்பினர்.

From around the web

Trending Videos

Tamilnadu News