×

பதில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் : இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் அபாயம்

India – Pakistan war : இரு இந்திய ராணுவ விமானங்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதால் இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புல்வாமா பகுதியில் 40 இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்கள் இந்திய விமானப்படையினரால் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதில், பல
 
பதில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் : இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் அபாயம்

India – Pakistan war : இரு இந்திய ராணுவ விமானங்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளதால் இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புல்வாமா பகுதியில் 40 இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்கள் இந்திய விமானப்படையினரால் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதில், பல தீவிரவாதிகள் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருந்தார்.

பதில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் : இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் அபாயம்

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக தற்போது பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதில் ஒரு இந்திய வீரர்கள் இருவர் பலியாகி விட்டதாகவும், 3 விமானிகளை பாகிஸ்தான் கைது செய்துள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடந்து இரு நாட்டு எல்லைகளிலும் பதட்டம் தொற்றியுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தினால் அது போரில் முடியும் என்பதால் இருநாட்டு மக்களுக்கும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News