×

சர்ச்சையில் பத்துமலை முருகன் கோவில் வண்ணப்படிகள்

பொதுவாக பாரம்பரியமான கோவில்கள் அனைத்திலுமே லேட்டஸ்ட் டெக்னாலஜி புகுந்துவிட்டது.இந்தியாவில் உள்ள பல கோவில்கள் பலவற்றில் டைல்ஸ், மார்பிள் கற்கள் போன்றவை போடுவதும் ஆகம விதிகளை மீறியதுதான் என்று சில மூத்த அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில் மலேசிய பத்துமலை முருகன் கோவிலில் நேற்று கும்பாபிசேகம் நடந்தேறியது. இந்த கும்பாபிசேகத்திற்கு பார்க்கப்பட்ட வேலைகளில் முக்கியமாக ஏறி செல்லும் படிக்கட்டுகளில் வண்ணம் பூசியது தவறு என இந்தியாவிலும் மலேசியாவிலும் வேறு சில நாடுகளிலும் எதிர்ப்பு அமைந்துள்ளது. இந்நிலையில், தேசிய மரபுடை
 
சர்ச்சையில் பத்துமலை முருகன் கோவில் வண்ணப்படிகள்

பொதுவாக பாரம்பரியமான கோவில்கள் அனைத்திலுமே லேட்டஸ்ட் டெக்னாலஜி புகுந்துவிட்டது.இந்தியாவில் உள்ள பல கோவில்கள் பலவற்றில் டைல்ஸ், மார்பிள் கற்கள் போன்றவை போடுவதும் ஆகம விதிகளை மீறியதுதான் என்று சில மூத்த அமைப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில் மலேசிய பத்துமலை முருகன் கோவிலில் நேற்று கும்பாபிசேகம் நடந்தேறியது.

இந்த கும்பாபிசேகத்திற்கு பார்க்கப்பட்ட வேலைகளில் முக்கியமாக ஏறி செல்லும் படிக்கட்டுகளில் வண்ணம் பூசியது தவறு என இந்தியாவிலும் மலேசியாவிலும் வேறு சில நாடுகளிலும் எதிர்ப்பு அமைந்துள்ளது.

இந்நிலையில், தேசிய மரபுடை மைத் துறையிடமிருந்து அனுமதி பெறப்படாமல் அப்பணிகள் மேற் கொள்ளப்பட்டதாகப் புகார் எழுந் துள்ளது. அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் தேசிய மரபுடைமைத் தலங்களுள் ஒன்றாக தேசிய மரபு டைமைப் பதிவேட்டில் இடம்பெற் றுள்ளது.

அதனால் மரபுடைமைத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகே ஆலயத்தில் எந்தவொரு மேம் பாட்டுப் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு மரபுடைமைத் தலம் தனது சிறப்புக்குரிய மரபுடைமை அடை யாளங்களைப் பேணிக் காக்காமல் போகும் பட்சத்தில், அது மரபுடை மைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று தேசிய மரபுடைமைத் துறையின் விதிகள் சொல்வதாக சமூக ஆர்வலரும் செந்தோசா சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜி.குணராஜ் தெரிவித்தார்.

உரிய அனுமதியோடு செலாங் நகராட்சியில் அனுமதி வாங்கியே வண்ணம் பூசப்பட்டது என கோவில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகள் எப்படி இருந்தாலும் கும்பாபிசேகம் நடந்து விட்டது காலப்போக்கில் மக்கள் இதை மறந்து விட இந்த பிரச்சினையும் அத்தோடு மறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News