×

இலங்கையில் மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் பலி

Srilanka Bomb blast – இலங்கையில் மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 14 பேர் பலியாகியுள்ளனர். சமீபத்தில், இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். பலரும் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் பல இடங்களில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலால், இலங்கை முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
 
இலங்கையில் மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் பலி

Srilanka Bomb blast – இலங்கையில் மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 14 பேர் பலியாகியுள்ளனர்.

சமீபத்தில், இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என 8 இடங்களில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். பலரும் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் பல இடங்களில் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலால், இலங்கை முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 3 பேரை கைது செய்தனர்.

இலங்கையில் மீண்டும் மனித வெடிகுண்டு தாக்குதல் – 14 பேர் பலி

இந்நிலையில், கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்ட போது, ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளும், போலீசாருக்கும் இடையே நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

அப்போது, வீட்டினுள் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக வீட்டில் இருந்த சில தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக மாறி குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதில், 15 தீவிரவாதிகள் பலியாகிவிட்டது தெரியவந்துள்ளது.

இது கல்முனை பகுதியில் வசிக்கும் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News