×

புகழ்பெற்ற மலேசிய பத்து மலை முருகன் கோவிலில் வரும் 31ல் கும்பாபிஷேகம்

மலேசியாவில் உள்ளது பத்துமலை முருகன் கோவில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. 1891ம் ஆண்டு தம்புசாமி பிள்ளை என்னும் தமிழரால் கட்டப்பட்ட இக்கோவில் பல வருடங்களாக மலேசிய நாட்டின் அடையாளத்தின் மிக முக்கிய கோவிலாக விளங்குகிறது.
 
புகழ்பெற்ற மலேசிய பத்து மலை முருகன் கோவிலில் வரும் 31ல் கும்பாபிஷேகம்

மலேசியாவில் உள்ளது பத்துமலை முருகன் கோவில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.

1891ம் ஆண்டு தம்புசாமி பிள்ளை என்னும் தமிழரால் கட்டப்பட்ட இக்கோவில் பல வருடங்களாக மலேசிய நாட்டின் அடையாளத்தின் மிக முக்கிய கோவிலாக விளங்குகிறது.

நடிகர் அஜீத் நடித்த பில்லா படத்தின் சேவல் கொடி பாடல் உட்பட எண்ணிலடங்கா திரைப்பட ஷூட்டிங் இங்கு நடந்துள்ளது.

புகழ்பெற்ற இக்கோவிலின் குடமுழுக்கு வரும் வெள்ளிக்கிழமை 31.08.2018 அன்று நடைபெற உள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News