×

செல்போனை பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர் – அதிர்ச்சி வீடியோ

ரயில் நிலையத்தில் செல்போனை பார்த்துக்கொண்டே நடந்து சென்ற ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. கடந்த 13ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அர்ஜெண்டினா தலைநகரான பியூனரஸ் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ஒருவர் செல்போனை பார்த்துக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நடைபாதையிலிருந்து விலகி கீழே தண்டவாளத்தில் விழுந்தார். நல்ல வேளையாக அப்போது ரயில் எதுவும் வரவில்லை. எனவே, அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். எனவே, கீழே விழுந்த அவரை
 
செல்போனை பார்த்துக்கொண்டே தண்டவாளத்தில் விழுந்த நபர் – அதிர்ச்சி வீடியோ

ரயில் நிலையத்தில் செல்போனை பார்த்துக்கொண்டே நடந்து சென்ற ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

கடந்த 13ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அர்ஜெண்டினா தலைநகரான பியூனரஸ் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ஒருவர் செல்போனை பார்த்துக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் நடைபாதையிலிருந்து விலகி கீழே தண்டவாளத்தில் விழுந்தார். நல்ல வேளையாக அப்போது ரயில் எதுவும் வரவில்லை. எனவே, அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

எனவே, கீழே விழுந்த அவரை சக பயணிகள் மேலே தூக்கி அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

செல்போனை பார்த்துக்கொண்டே நடக்கக் கூடாது என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News