×

கிரின்லாந்தை வாங்க முயலும் ட்ரம்ப் – அமெரிக்காவுக்கு நச் பதிலடி கொடுத்த அரசு !

உலகின் மிகப்பெரிய தீவாகவும் சுற்றுலாத் தளமாகவும் இருக்கும் கிரின்லாந்தை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் அரசுக்குக் கீழ் உள்ள தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்த் உலகின் மிகப் பெரிய தீவாகும். மேலும் உலக சுற்றுலாப் பயணிகளின் முதல் விருப்பத்தலமாகவும் உள்ளது. இந்நிலையில் இந்தத் தீவை விலைக்கு வாங்குவது தொடர்பாக தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த சில
 
கிரின்லாந்தை வாங்க முயலும் ட்ரம்ப் – அமெரிக்காவுக்கு நச் பதிலடி கொடுத்த அரசு !

உலகின் மிகப்பெரிய தீவாகவும் சுற்றுலாத் தளமாகவும் இருக்கும் கிரின்லாந்தை விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள, டென்மார்க்கின் அரசுக்குக் கீழ் உள்ள தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதியான கிரீன்லாந்த் உலகின் மிகப் பெரிய தீவாகும். மேலும் உலக சுற்றுலாப் பயணிகளின் முதல் விருப்பத்தலமாகவும் உள்ளது. இந்நிலையில் இந்தத் தீவை  விலைக்கு வாங்குவது தொடர்பாக தனது ஆலோசகர்களுடனான கூட்டத்தின்போது டிரம்ப் விரும்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாகப் பரவி வரும் இந்த தகவலுக்கு கிரீன்லாந்து அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் ‘ நாங்கள் அமெரிக்காவுடன் சிறந்த உறவுமுறையில் இருந்துவருகிறோம். எங்கள் நாடு வளமான தாதுக்கள், சுத்தமான குடிநீர் மற்றும் மீன் ஆகியவற்றால் சாகச சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பத்தலமாக உள்ளது. நாங்கள் வணிகத்திற்காக ஆர்வமாக உள்ளோம். ஆனால் விற்பனைக்காக அல்ல’ எனத் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக 1946 ஆம் ஆண்டும் இதேப் போல அமெரிக்க கிரின்லாந்தை வாங்க முயன்று அதுவும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News