×

கொடியை மாற்றி ஏற்றி குழப்பம் விளைவித்த டிரம்ப்

அமெரிக்காவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் ஜான் மெக்கைன். இவர் 2008ம் ஆண்டு நட்ந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் ஓபாமாவை எதிர்த்து நின்று தோல்வியை தழுவினார். ஒரே கட்சியை சேர்ந்த டிரம்பிற்கும் மெக்கைனுக்கும் கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன . தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய டிரம்ப், அனைவரும் நினைப்பது போல் மெக்கைன் போர் நாயகன் எல்லாம் இல்லை என அவரை தாக்கி பேசியுள்ளார். ஏன் என்றால்
 
கொடியை மாற்றி ஏற்றி குழப்பம் விளைவித்த டிரம்ப்

அமெரிக்காவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் ஜான் மெக்கைன். இவர் 2008ம் ஆண்டு நட்ந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் ஓபாமாவை எதிர்த்து நின்று தோல்வியை தழுவினார்.

ஒரே கட்சியை சேர்ந்த டிரம்பிற்கும் மெக்கைனுக்கும் கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன . தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய டிரம்ப், அனைவரும் நினைப்பது போல் மெக்கைன் போர் நாயகன் எல்லாம் இல்லை என அவரை தாக்கி பேசியுள்ளார். ஏன் என்றால் மெக்கைன் அமெரிக்க வியட்நாம் போரின்போது வியட்நாமால் சிறை பிடிக்கப்பட்டு பல வருடம் சிறைவாசம் அனுபவித்தவர் அதனால் அவருக்கு போர் நாயகன் என பெயர் வந்தது.

மூளையில் புற்றுநோய் தாக்கியதால் சிகிச்சை பெற்று வந்த மெக்கைன் கடந்த 25-ம் தேதி காலமானார். இதனால், நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கும் வகையில் அமெரிக்க தேசிய கொடி வெள்ளை மாளிகை உள்பட அனைத்து இடங்களிலும் சனிக்கிழமை அன்று அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

ராணுவ தலைமையகமான பெண்டகன், அமெரிக்க உச்ச நீதிமன்றம் மற்றும் வெள்ளை மாளிகை போன்ற இடங்களில் நேற்று முன்தினம் முழுவதும் அறைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்ட அமெரிக்க கொடியை தனது முன் விரோதம் காரணமாக நேற்று மீண்டும் முழுக்கம்பத்தில் பறக்கவிட்டார் டிரம்ப்.

டிரம்பின் இந்த செயலால் கடும் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ராணுவ வீரர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News