×

உணவைக் கொண்டுவரத் தாமதமாக்கிய வெய்ட்டர் – கோபத்தில் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் !

பிரான்ஸ் நாட்டில் உணவைக் கொண்டுவருவதற்குத் தாமதமாக்கிய வெயிட்டரை சுட்டுக்கொன்றுள்ளார் ஒரு வாடிக்கையாளர். பிரான்ஸ் நாட்டில் உள்ள நாய்ஸி லீ கிரேனட் எனும் பகுதியில் உள்ள பீட்ஸா அண்ட் சாண்ட்விச் எனும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர். அங்கு அவர் தனக்காக சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரைப் பெற்றுக்கொண்ட வெயிட்டர் வெகு நேரமாகியும் சாண்ட்விச்சைக் கொண்டுவந்து தரவில்லை. இதனால் வாடிக்கையாளர் கோபமாகியுள்ளார். நீண்ட நேரத்துக்குப் பின் அந்த வெய்ட்டர் அந்த சாண்ட்விச்சைக் கொண்டு வந்து கொடுத்ததும் தாமதத்துக்காக அவரைக்
 
உணவைக் கொண்டுவரத் தாமதமாக்கிய வெய்ட்டர் – கோபத்தில் சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர் !

பிரான்ஸ் நாட்டில் உணவைக் கொண்டுவருவதற்குத் தாமதமாக்கிய வெயிட்டரை சுட்டுக்கொன்றுள்ளார் ஒரு வாடிக்கையாளர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள நாய்ஸி லீ கிரேனட் எனும் பகுதியில் உள்ள பீட்ஸா அண்ட் சாண்ட்விச் எனும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர். அங்கு அவர் தனக்காக சாண்ட்விச்சை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரைப் பெற்றுக்கொண்ட வெயிட்டர் வெகு நேரமாகியும் சாண்ட்விச்சைக் கொண்டுவந்து தரவில்லை.

இதனால் வாடிக்கையாளர் கோபமாகியுள்ளார். நீண்ட நேரத்துக்குப் பின் அந்த வெய்ட்டர் அந்த சாண்ட்விச்சைக் கொண்டு வந்து கொடுத்ததும் தாமதத்துக்காக அவரைக் கண்டபடி திட்டியுள்ளார் வாடிக்கையாளர். அப்போதும் அவரது கோபம் தீராமல் அந்த நபரை தனது பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார்.

குண்டடிப்பட்ட அந்த வெயிட்டரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். சிசிடிவி மூலம் அந்த நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News