×

வியாழன் கிரகத்தில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

சூரியக் கிரகத்தில் ஐந்தாவது மற்றும் மிகப்பெரிய கோளான வியாழன் கிரகத்தில் அடர்த்தியான மேகங்கள் இருப்பதால் அங்கு அதிக அளவில் தண்ணீர் இருக்கு வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். மற்ற கோள்களில் மனிதர்கள் வாழும் சூழல் இதுவரை கண்டறியப்படவில்லை. அதற்கான முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய், வியாழன் என பல கோள்களில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த
 
வியாழன் கிரகத்தில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

சூரியக் கிரகத்தில் ஐந்தாவது மற்றும் மிகப்பெரிய கோளான வியாழன் கிரகத்தில் அடர்த்தியான மேகங்கள் இருப்பதால் அங்கு அதிக அளவில் தண்ணீர் இருக்கு வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். மற்ற கோள்களில் மனிதர்கள் வாழும் சூழல் இதுவரை கண்டறியப்படவில்லை. அதற்கான முயற்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். செவ்வாய், வியாழன் என பல கோள்களில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 350 ஆண்டுகளாக வியாழன் கிரகத்தை புயல் தாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து ஆய்வு செய்துவரும் நாசா சிகப்பு நிற பகுதி ஒன்றை உற்றுநோக்கி ஆய்வு செய்தபோது அடர்ந்த மேகங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இந்த மேகங்களில் ஆக்ஸிஜன், கார்பன் மோனாக்சைடு ஆகியவை இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்புக்கு நாசாவின் ஜூனோ வின்கலம் உதவியுள்ளது. இந்த ஜுனோ விண்கலத்தில் உள்ள அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோ மீட்டர் மற்றும் மைக்ரோவேவ் ரேடியோ மீட்டர் மிகவும் ஆழமாக உற்று நோக்கி தண்ணீர் கண்டறியும் தன்மை கொண்டது. இதன் மூலமே மேகக் கூட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News