அஜித் போனா போகட்டும்..நான் இருக்கேன்!.. விக்னேஷ் சிவனுக்கு கை கொடுக்கும் பெரிய நடிகர்..
“ஏகே 62” திரைப்படம் விக்னேஷ் சிவனின் கையை விட்டுப்போன செய்தியையும், அத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என்ற தகவலையும் சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
மகிழ் திருமேனி அஜித்தை வைத்து இயக்கும் தகவல் ஓரளவு உறுதியாகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்திற்கான பூஜையும் இன்று நடந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து “ஏகே 62” திரைப்படத்தில் இருந்து வெளியேறிய விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி சமீப நாட்களாக வலம் வருகிறது. இந்த நிலையில் இன்று வலைப்பேச்சு யூட்யூப் சேன்னலில், விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என்று ஒரு தகவல் கூறப்பட்டது.
இத்தகவல் வெளிவந்த சில நிமிடங்களிலேயே தற்போது விக்னேஷ் சிவன் குறித்த ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது விக்னேஷ் சிவன், கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஒரு செய்தி வெளிவருகிறது.
அதாவது “விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது விஜய் சேதுபதிக்கும் கமல்ஹாசனுக்கு ஒரு நல்ல உறவு ஏற்பட்டிருந்ததாம். அதனை தொடர்ந்து கமல்ஹாசன், விஜய் சேதுபதியிடம் தனது பேன்னரில் ஒரு படம் நடிக்குமாறு கூறினாராம். அதற்கு விஜய் சேதுபதி “நீங்கள் எப்போது என்று சொல்லுங்கள், நிச்சயமாக உங்கள் பேன்னரில் நடிக்கிறேன்” என கூறினாராம்.
இந்த நிலையில் கமல்ஹாசனை விக்னேஷ் சிவன் சந்தித்தபோது, தனது பேன்னரில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவனும் ஓகே என்று பதிலளித்திருக்கிறாராம்.
கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளார். அதன் பின் மணிரத்னம், ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தான் நடிக்கும் 234 ஆவது திரைப்படத்தையும் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார்.
இத்திரைப்படங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன் கமல்ஹாசனின் பேன்னரில் படம் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லியோ படத்தில் இவர் நடிக்கிறாரா?… வதந்தியை கிளப்பிவிட்ட லோகேஷ் கனகராஜின் உயிர் நண்பர்…