அந்த எபெக்ட் இல்லாமலேயே கங்குவா படத்தைப் பார்த்து பிரமித்துப் போன தயாரிப்பாளர்... படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?
சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் பிரம்மாண்டமான படம் கங்குவா. சூர்யா இரட்டை வேடத்தில் மிரட்டலான தோற்றத்துடன் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். பாபி தியோல், தீஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், தீபா வெங்கட், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தப் படத்தை 3டியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
கங்குவா மற்றும் தங்கலான் படங்கள் குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
நான் கிட்டத்தட்ட வந்து 40 நிமிஷம் கங்குவா பார்த்து விட்டு ரொம்ப பெருமைப்பட்டேன். இந்தியன் சினிமாவுலயே ஒரு பிரமிப்பான படமா இருக்கும். சிவா சாரும் அதைத் தான் சொன்னாரு. இந்தப் படத்தை என்னோட டீம்ல எல்லாரும் பார்த்துட்டாங்க. சூர்யா சாரும் பார்த்துட்டாரு. அவங்க எல்லாம் ரொம்ப ஹேப்பி.
இதையும் படிங்க... விசு கதை சொல்ல அரட்டை அடித்த கண்ணதாசன்… ஆனா பாடல் வந்ததுதான் கூஸ்பம்ப்ஸ்!
இந்தப் படத்தை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு எல்லாம் படத்தைக் காமிக்கிறதுக்கு விருப்பமா இருக்கு. ரஞ்சித் சாரும் படம் ரொம்ப நல்லா வந்துருக்குன்னு ஒரு இன்டர்வியுல சொன்னாரு. நான் அங்கங்கே கொஞ்சம் பார்த்துருக்கேன்.
எல்லாருமே சொன்னது என்னன்னா இது ஒரு விஎப்எக்ஸ் பேஸ் பண்ணின படம். இதுல கிராபிக்ஸ் எல்லாம் சேர்ந்து வரும்போது தான் முழுமையான ஒரு படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும். அதுக்கு முன்னாடி பார்க்கும்போது அந்த அளவு எபெக்ட் இருக்காது.
அதனால எல்லாரும் என்ன சொன்னாங்கன்னா 'நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கம்ப்ளீட்டா எல்லாம் முடிஞ்ச பிறகு பைனலுக்கு முன்னால உங்களுக்குக் காட்டுறோம். அப்ப நீங்க உங்க கருத்தை சொல்லுங்க'ன்னாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் குறித்து அவர் பேசும்போது, இப்போ 2 வாரத்துக்கு ஒரு பெரிய படம் வரப்போகுது. சென்சாருலயே 60 படம் வரிசைகட்டி காத்துக்கொண்டு இருக்குதாம். அதுமட்டுமல்லாமல் ஜூன் 27ல கல்கி, ஜூலை 12 இந்தியன் 2, ஜூலை 24ல ராயன், ஆகஸ்ட் 15 புஷ்பா 2 இப்படி தொடர்ந்து வரும்போது இதுக்கு இடையிலயும் பெரிய படங்களை ரிலீஸ் பண்ண முடியாது.
அதனால கங்குவா ரிலீஸ் இப்போதைக்கு இல்லை. தங்கலான் படத்துக்கும் சென்சாரில் பிரச்சனை போய்க்கிட்டு இருக்கு. அவர் தெரிவித்துள்ளார்.