இப்படி கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டீங்களே!.. ஜெயம் ரவியை விளாசிய ரசிகர்.. உடனே பதறிய நடிகர்!

by Saranya M |   ( Updated:2024-02-17 03:11:42  )
இப்படி கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டீங்களே!.. ஜெயம் ரவியை விளாசிய ரசிகர்.. உடனே பதறிய நடிகர்!
X

ஜெயம் ரவி நடிப்பில் உருவான சைரன் திரைப்படம் நேற்று வெளியானது. அந்த படத்தை ரசிகர்களுடன் மதுரையில் உள்ள சினிப்பிரியா தியேட்டரில் ஜெயம் ரவி கண்டு ரசித்தார். மேலும் சில திரையரங்குகளுக்கு சென்று , ரசிகர்களுடன் போட்டோ மட்டும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், ஜெயம் ரவி தன்னை ஏமாற்றி விட்டார் என்றும் அவருடைய நெருங்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் உடன் மட்டுமே போட்டோ எடுத்து சென்றார் என்றும், பின்னர் எதற்கு எங்களையெல்லாம் அழைத்தீர்கள் என சோசியல் மீடியாவில் ஜெயம் ரவியை டேக் செய்து தைரியமாக கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: 1000 ஸ்க்ரீன்ல வெளியான ஜெயம் ரவியின் சைரன்!.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டிச்சா?..

இப்போதான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து கொஞ்சம் பிக்கப் ஆக ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் நெகட்டிவிட்டி பரப்பி சோலியை முடித்து விட நினைத்து விட்டாரே இந்த ரசிகர் என நினைத்த ஜெயம் ரவி உடனடியாக ட்விட்டர் அந்த ரசிகருக்கு ரிப்ளை செய்துள்ளார்.

ரொம்ப சாரி பிரதர். நேற்று 300க்கும் மேற்பட்ட நபர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். உங்களை எப்படி மிஸ் செய்தேன் என தெரியவில்லை. சென்னைக்கு வாங்க நிச்சயம் செல்பி எடுத்துக்கலாம். போட்டோ எடுங்க முடியாத காரணத்திற்காக என்னை வெறுத்துவிட வேண்டாம் அன்பை பரப்புங்கள்என பதிவு போட்டுள்ளார் ஜெயம் ரவி.

இதையும் படிங்க: எப்படிப்பா அந்த பழைய யுவனை மறுபடியும் தேடி பிடிச்சிங்க!.. நிவினை தொடர்ந்து கவினுக்கும் சூப்பர் சாங்!

அந்த ரசிகருக்கு ஜெயம் ரவி கமெண்ட் போட்ட நிலையில், ஜெயம் ரவியின் ரசிகர்கள் சைரன் படம் ஹீரோவை பாராட்டி வருகின்றனர்.

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சைரன் திரைப்படம் நேற்று வெளியானது. சோலோவாக ரிலீசான அந்த திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

Next Story