இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் லேடி சூப்பர் ஸ்டார்!… இவர்தான் இயக்குனரா?... அம்மணிக்கு பட்ஜெட்டே பத்தாதே…

by amutha raja |
nayanthara
X

Actress Nayanthara: நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாய் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே இவரை பலருக்கு பிடித்திருந்தது.

பின் சந்திரமுகி, கஜினி, சிவகாசி போன்ற பல திரைப்படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். மேலும் ஓ2, அறம் போன்ற பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடிக்க துவங்கினார். கதாநாயகன் இல்லாமலும் படங்கள் எடுக்க முடியும் எனும் ஒரு புது அத்தியாயத்தினை உருவாக்கியவர் நடிகை நயன்தாரா.

இதையும் வாசிங்க:இனிமே இப்படிதான் நடிக்கனும்… விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட சங்கீதா…

இவர் மேலும் பில்லா, விஸ்வாசம், தனி ஒருவன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம்தான் ஜவான். இப்படத்தில் இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இப்படம் இவருக்கு தனி ஒரு அந்தஸ்த்தை பெற்று தந்தது என்றுதான் கூற வேண்டும்.

இப்படத்திற்கு பின் நயனுக்கு பாலிவுட் படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. மேலும் இவர் தனது சம்பளத்தியும் உயர்த்திவிட்டதாக தகவல்கள் உலாவுகின்றன. இவர் தமிழ் திரைப்படங்களை விட பாலிவுட் திரைப்படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கின்றாராம். ஆனால் தற்போது இவர் ஏற்கனவே நடித்து வெற்றியடைந்த கோலமாவு கோகிலாவின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் வாசிங்க:த்ரிஷாவுக்கு முத்தமெல்லாம் கொடுக்க முடியாது… மறுத்த முன்னணி நடிகர்..! ஆனா படம் சூப்பர்ஹிட்..!

இப்படத்தின் முதல் பாகத்தை இயக்குனர் நெல்சன் இயக்கினார். இப்படத்தில் யோகிபாபு போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது நெல்சன் இயக்கவுள்ளாராம். மேலும் நயனும் இதில் நடிக்க சம்மதித்துவிட்டாராம்.

நெல்சன் சமீபத்தில் ஜெயிலர் போன்ற பெரிய பட்ஜெட் படத்தினை எடுத்துவிட்டு தற்போது சிறிய பட்ஜெட் படத்தினை இயக்கவுள்ளார். ஆனால் தற்போது தனது சம்பளத்தை ஏற்றியுள்ள நயன் இப்படத்திற்கு எவ்வளவு கேட்க போகிறார் என்பது தெரியவில்லை. இப்படத்தினை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க:விஜயை நெகட்டிவாக காட்ட தான் இந்த காட்சி இருந்தது… சர்ச்சைக்கு பதில் சொல்லிய லியோ ஒளிப்பதிவாளர்..

Next Story