ஓரங்கப்பட்டாரா அருண்விஜய்...! கூட்டத்தில் கெத்து காட்டும் சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் அருண்விஜய் மற்றும் சிவகார்த்திகேயன். எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு வந்த நடிகர் விஜயகுமார் அவரின் இன்ஃபுளுயன்ஸை பயன்படுத்தி அருண்விஜயை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்தார்.
ஆரம்பத்தில் அருண்விஜய் படங்கள் சரியாக ஓடாததால் நட்சத்திர அந்தஸ்த்தை பெறமுடியவில்லை.அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்துடன் வில்லன் கேரக்டரில் ஒரு ரீ-என்டிரி கொடுத்தார். அதன்பிறகு வரிசையாக பட வாய்ப்புகள் வர தற்போது நட்சத்திர அந்தஸ்த்தோடு நல்ல படங்கள் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.
ஆனால் சிவகார்த்திகேயன் எந்த பின்புலம் இல்லாமல் வந்து மூணு என்ற படத்தில் தனுஷுடன் நடித்தார்.அவருக்கும் அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த நிலையில் ஒரு ஃபினான்ஸியர் இல்லத் திருமண விழாவிற்கு சிவகார்த்திகேயனும், அருண்விஜயும் சென்றிருந்தனர். அருண்விஜய்க்கு ரசிகர்கள் குறைவு என்பதால் சிவகார்த்திகேயன் உள்ளே வரும்போது அவரின் காவலர்கள் எல்லாரையும் தள்ளிக்கொண்டே சென்றனர்.
அப்போது அங்கு நின்ற அருண்விஜயும் தள்ளப்பட்டாராம். அப்போது சிவகார்த்திகேயன் கெத்தா உள்ளே வர ரசிகர்கள் ஆரவாரத்துடன் கத்திக்கொன்டு இருந்தனராம். இந்த தகவலை பயில்வான் ரெங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.