நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி படமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்த படம் கடந்த 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டும்.. ஆனால் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் படம் இதுவரை வெளியாகவில்லை. ரிலீஸ் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு மறுதணிக்கை செய்ய வேண்டும்.. அதற்கு சில வாரங்கள் ஆகும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. ஆனால் அதை ஏற்காமல் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்து அதனால் தனி நீதிபதி பீடி ஆஷாவின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு, அதன்பின் தயாரிப்பாளர் உச்சநீதிமன்றம் சென்று, அதன்பின் இந்த வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு வந்து, தற்போது இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி ஆஷாவே விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதாவது ‘இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்கிற கதைதான்.
இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வந்து.. எப்போது தீர்ப்பு வந்து.. எப்போது படம் வெளியாகும் என்கிற கலக்கம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கிறது.. ஒருபக்கம் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வாரியம் மூலமாக பிரச்சனை கொடுக்கிறார்கள் என நினைத்து விஜய்தான் தயாரிப்பாளரிடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என சொன்னதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது..
ஆனால், தற்போது நிலைமை கை மீறி போய்விட்டது. மேலும் தணிக்கை வாரியமும் பிடிவாதமாக இருக்கிறது.. இதனால் தயாரிப்பதற்கு பல கோடி நஷ்டம்.. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்கிறார்கள்.. எனவே இனிமேலும் கால தாமதம் செய்தால் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற திட்டமிட்டிருக்கிறாராம்.

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com





