வடிவேலு இல்லாமல் உருவாகும் ‘தலைநகரம்’அடுத்த பாகம்.... வொர்க் அவுட் ஆகுமா?....

by சிவா |   ( Updated:2021-09-23 10:38:14  )
vadivelu-3
X

இயக்குனர் சுராஜ் இயக்கும் படங்கள் என்றாலே அதில் காமெடி அசத்தலாக இருக்கும். அதிலும் அவர் இயக்கிய தலைநகரம் திரைப்படத்தில் இடம் பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சிகளால் இப்போதும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் நாய் சேகராக, மாமன் மகள் என நினைத்து கதாநாயகியை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் வடிவேலு.

குறிப்பாக மிகவும் பிரபலமான ‘நான் ஜெயிலுக்கு போறேன்’ என்கிற காட்சி இடம் பெற்றது இப்படத்தில்தான். இப்படத்தில் வடிவேலு வரும் அனைத்து காட்சிகளுமே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

thalainagaram-2

ஆனால், சில காரணங்களால் வடிவேலு கடந்த 4 வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது அந்த பஞ்சாயத்துக்கள் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கவந்துள்ளார் வடிவேலு.

இந்நிலையில், தலைநகரம் 2 தற்போது உருவாகவுள்ளது. இதில், முதல் பாகத்தில் நடித்த சுந்தர் சியே ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

thalainagaram-2-2

ஆனால், இப்படத்தை சுராஜ் இயக்கவில்லை. முகவரி, தொட்டி ஜெயா, போராளி, இருட்டு ஆகிய படங்களை இயக்கிய இசட் துரை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில், தாணு உட்பட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

thalainagaram-pooja

மேலும், இப்படத்தில் வடிவேல் நடிப்பாரா என்பது தெரியவில்லை. வடிவேல் இல்லாமல் இப்படம் உருவானால் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story