நான் விஜய் டிவி விட்டு போறேன்டா… கடுப்பில் கொந்தளித்த பிரியங்கா – வீடியோ!

Published on: May 14, 2022
priyanka
---Advertisement---

விஜே பிரியங்காவின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல்!

படபட பேச்சு, வெகுளித்தனம், நல்ல திறமை என தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான ஆங்கராக பார்க்கப்படுபவர் விஜே பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியில் மகாபாவுடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமாகினார்.

இதனிடையே தன் நண்பரும் நீண்ட நாள் காதலருமான பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களிடையே நல்ல பெயரை சம்பாதித்தார்.

priyanka dp
priyanka dp

இதையும் படியுங்கள்: செம்ம ஜாலியாக உடற்பயிற்சி செய்து அசத்தும் லாரன்ஸ் பட நடிகை!!!

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தற்போது 8வது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உலக இசை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ப்ரோமோ வீடியோவில் பிரியங்காவுக்கு பதிலாக மிகா என்ற பெண்ணை கோ ஆங்கராக வைத்துக்கொள்வதாக கூறி அவரை கடுப்பேற்றிவிட்டார். உடனே ப்ரியங்கா கோபத்தில் நான் விஜய் டிவியை விட்டே வெளியேறுகிறேன் என கூறிய ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ லிங்க்:https://www.youtube.com/watch?v=iqBWIREpEmw&t=40s

Leave a Comment