பசினா பசி காட்டுப்பசி!.. லைன் அப்பில் இருக்கும் அந்த மாதிரியான படங்கள்.. வெறிகொண்டு அலையும் சிம்பு..

by Rohini |
simbu
X

simbu

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து வருகிறார் நடிகர் சிம்பு. அவருக்குள் இருக்கும் மாற்றம் சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி மிகவும் நிதானமாகவே காணப்படுகிறார்.

சினிமாவில் தாக்குப்பிடிப்பாரா இல்லையா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது ஒரு காலத்தில் சிம்புவை பற்றி. ஆனால் ஒரு வெயிட்டான கம்பேக் கொடுத்து ‘திரும்பவும் வந்துட்டேனு சொல்லு’ என ரஜினியின் பாணியில் களத்தில் இறங்கினார்.

simbu1

simbu1

மாநாடு படம் மாபெரும் வெற்றியை கொடுத்து சிம்புவின் மார்கெட்டையே வானுலக பார்க்க வைத்தது. அதனை அடுத்து வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி ஓரளவு வெற்றியை பதிவு செய்தது. அடுத்ததாக அவரின் நடிப்பில் பத்து தல படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது.

அந்தப் படத்தில் கே.ஜி.எஃப் யஷ்ஷுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அமைந்த கதாபாத்திரத்தில் பெரிய டானாக காட்சியளிக்கிறார் சிம்பு. இந்த நிலையில் ஒரு ஆங்கில சேனலில் பேட்டி கொடுத்த சிம்பு அவரின் சினிமா பற்றிய ஆசையை வெளிப்படையாக கூறியிருந்தார்.

simbu2

simbu2

அதாவது சிம்புவுக்கு சமீபகாலமாக சினிமா மீது பெரிய பசியே வந்துவிட்டதாம்.அந்த பசிக்கு ஏற்ப ஸ்கிரிப்டுகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறாராம். பசினா சும்மா இல்ல, காட்டுப்பசியாம். அந்த மாதிரி இருக்கும் போது கிடைக்கிற படங்களில் எல்லாம் நடித்து விட முடியாது என்றும் என்னை நிரூபித்துக் கொள்ள காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அப்படி அந்த நேரத்தில் இருக்கும் போது தான் அவர் மன்மதன் என்ற படத்தை இயக்கி நடித்தார். இப்பவும் அவரது லைன் அப்பில் அந்த மாதிரி ஸ்கிரிப்டுகள் இருக்கின்றதாம். ஆனால் அந்த படங்களில் நடிப்பதற்கு முன் என் பசிக்கு ஏற்றாற் போல ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : இது என்னப்பா புதுப்பிரச்சினையா இருக்கு?.. எந்த வம்புக்கு போகாத மனுஷன்.. மாட்டிக் கொண்டு முழிக்கும் எஸ்.ஜே.சூர்யா..

Next Story