பார்ப்பதெல்லாம் உண்மை இல்லை - இங்கே யாரும் உண்மையை பார்ப்பதும் இல்லை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் புதிய ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளார் கமல்.

அக்டோபர் 3 மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகப்போகும் இந்த நிகழ்ச்சியில் குக்வித் கோமாளி கனி, விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, பிரபல நடிகை ஷகிலாவின் மகள் மிலா, பாபா பாஸ்கர், இமான் அண்ணாச்சி, விஜே பப்பு, நடிகர் நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன், நடிகை கெளசல்யா, தொழிலதிபர் ரேணுகா பிரவின், உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேசும் கமல் பார்ப்பதெல்லாம் உண்மை இல்லை - இங்கே யாரும் உண்மையை பார்ப்பதும் இல்லை என கூறி நிகழ்ச்சியின் மீதான ஸ்வாரஸ்யத்தை அதிகரித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=N8MkMwuAjAY

Related Articles
Next Story
Share it