புது ஃபேஷன் ஸ்டைலில் மயக்கும் பூஜா ஹெக்டே.. தாறுமாறான சேலையில் ஃபோட்டோ ஷூட்!

by muthu |   ( Updated:2023-05-18 13:49:59  )
புது ஃபேஷன் ஸ்டைலில் மயக்கும் பூஜா ஹெக்டே.. தாறுமாறான சேலையில் ஃபோட்டோ ஷூட்!
X

நடிகை பூஜா ஹெக்டே, நவநாகரீக தோற்றத்தில் சேலை கட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தெலுங்கில் ஒக லைலா கோஷம் (2014) படத்தின் மூலம் பிரபலமான பூஜா ஹெக்டே. ஓக லைலா கோசம் மற்றும் ஆல வைகுண்ட புரமலு(2019) அரவிந்த சமேத வீர ராகவா (2018). துவ்வாடா ஜகந்நாதம் (2017), மகரிஷி (2019), கடலகொண்ட கணேஷ் (2019), ஹவுஸ்ஃபுல் 4 (2019), மற்றும் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் (2021) ஆகியவை இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. 2022 இல், ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த வருடம் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்" படத்திலும் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை பூஜா ஹெக்டே. 22.6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர் பூஜா ஹெக்டே.

சில மாதங்களுக்கு முன் நடிகை பூஜா ஹெக்டே, வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

தற்போது "ஜனகனமன", சர்க்கஸ், தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படம் என பல படங்களை பூஜா ஹெக்டே கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். Jade நிறுவன கருப்பு நிற பேன்சி சேலையில் தோன்றியுள்ளார். பிரபல போட்டோ கிராபர் சிவம் குப்தா இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

Next Story