மறைந்தாலும் மனதில் வாழும் மோனிஷா

கேரள நடிகைகள் பெரும்பாலும் அழகாக மிக குடும்ப பாங்காக இருப்பார்கள். பார்ப்பவர்களை கவரும் விதத்தில் இவர்களின் தோற்றம் இருக்கும். அப்படி ஒரு அழகு தேவதையாக தமிழக திரைவானில் ஜொலித்தவர் நடிகை மோனிஷா.

கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்தாலும் இவரது தந்தை நாராயணன் உன்னி பெங்களூரில் லெதர் பிஸினஸ் செய்துவந்தார். அதனால் இவர் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற பிஷப் காட்டன் பள்ளியில்தான் படித்தார்.

கேரளாவில் பிறந்ததால் அங்கு புகழ்பெற்ற கலையான மோகினியாட்டத்தில் கை தேர்ந்தவர்.

கர்நாடக அளவில் நடைபெற்ற மோகினியாட்டத்தில் 1985ம் ஆண்டு கலந்து கொண்டு உயரிய விருதான் கெளசிகா விருதினை பெற்றவர்.

1984ல் வெளியான பாவய்யா என்ற படத்திலேயே இவர் 14 வயதில் நடிக்க ஆரம்பித்தார்.தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்தாலும் தமிழில் வந்த பூக்கள் விடும் தூது என்ற தமிழ்படத்தில்தான் இவர் தமிழில் அறிமுகமானார் ஓரளவு வெளியில் தெரியவும் செய்தார் அப்போது பார்ப்பதற்கு சிறு குழந்தை போல் இவரது தோற்றம் இருக்கும்.

இந்த படத்தை ஸ்ரீதர் ராஜன் என்பவர் இயக்கி இருப்பார். முழுக்க முழுக்க கன்னியாகுமரியிலேயே இப்படம் இயக்கப்பட்டிருக்கும்.டி.ராஜேந்தர் இப்படத்துக்கு இசையமைத்திருப்பார் அழகான பாடல்களை கொடுத்திருப்பார்.

பிறகு 1989ல் சத்யராஜ் நடித்த திராவிடன் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார் அந்த படம் சரியாக போகவில்லை.

1992ம் ஆம் ஆண்டு குருதனபால் இயக்கத்தில் வெளிவந்த உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில்தான் இவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார். அப்படத்தில் இவரின் சிறந்த நடிப்பு, அந்த படத்திலும் பாதியிலேயே இவர் இறந்து விடுவதுபோல் துயரமான காட்சி அமைக்கப்பட்டிருக்கும். என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னனின் பேரும் என்னடி என்ற பாடலை பார்க்கும் ரசிகர்கள் இன்றும் மோனிஷாவை மறக்க மாட்டார்கள் என சொல்லலாம்.

பிறகு மணிவண்ணன் இயக்கத்தில் வந்த மூன்றாவது கண் என்ற த்ரில்லர் படத்தில் நடித்தார் இந்த படத்திலும் ஒரு அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கும் கதாபாத்திரம்தான் இவருக்கு அதையும் சிறப்பாக செய்தார்.

இரண்டு தமிழ் படங்களிலும் நடித்து அடுத்தடுத்து மக்கள் மனதில் எளிமையாக புகுந்தார் மோனிஷா.

மோனிஷா 1986ம் ஆண்டு வெளியான நக்‌ஷத்ரா என்ற படத்தில் நடித்ததற்காக சிறுவயதிலேயே தேசிய விருது வென்றவர் ஆவார்.

செப்படி வித்யா என்ற மலையாளப்படத்தில் நடித்துவிட்டு வரும்போது நடந்த சாலை விபத்தில் 1992ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரும் அவரது தாயாரும் சென்ற காரும் கேரளாவின் ஆழப்புழா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது இதில் மோனிஷா பலியானார். இவரது தாய் காயங்களுடன் உயிர்பிழைத்தார்.

தமிழில் இவர் நடித்து வெளிவந்த மூன்றாவது கண் இவர் இறந்த பின் தான் வெளிவந்தது மோனிஷா இறப்பின்போது அவருக்கு வயது 22.

இன்றும் அவரது தாய் மோனிஷாவின் இறப்பை நினைத்து கலங்கி கொண்டிருக்கிறார். மிக வேகமாக வளர்ந்து வந்த நடிகை, சிறப்பாக தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்திருக்க வேண்டிய நடிகை மோனிஷா மறைந்தது அப்போது ரசித்து பார்த்த 90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் இப்போது வரை மறக்க முடியவில்லை எனலாம்.

 

Related Articles

Next Story