விஜயகாந்தை கடைசிவரை பார்க்க விடல!.. வசனகர்த்தா லியாகத் அலிகான் உருக்கம்...
Vijayakanth: விஜயகாந்துடன் பல வருடங்களாக நெருக்கமாக இருந்தவர் லியாகத் அலிகான். மதுரையில் இருக்கும்போது விஜயகாந்துடன் பழகியவர் இவர். விஜயகாந்த் வளர துவங்கிய போது அவரின் ரசிகர் மன்றங்களை ஒழுங்குபடுத்தி அதை சரியான பாதையில் கொண்டு சென்றதில் இப்ராஹிம் ராவுத்தரோடு சேர்ந்து செயல்பட்டவர் இவர்தான். விஜயகாந்தை வைத்து பாட்டுக்கொரு தலைவன், ஏழை ஜாதி, எங்க முதலாளி ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
பூந்தோட்ட காவல்காரன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், சக்கரை தேவன், கஜேந்திரா ஆகிய படங்களில் அனல் பறக்கும் அரசியல் வசனங்களை எழுதியவர். விஜயகாந்த் மறைந்துள்ள நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்தபோது சொன்னதாவது:
இதையும் படிங்க: நான் சாகுறதுதான் சரி!. பிரேமலதாவிடமே சொன்ன விஜயகாந்த்… இது எப்ப நடந்தது தெரியுமா?!..
விஜயகாந்தை எம்.ஜி.ஆரை போல கொண்டு வரவேண்டுமென்று பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். ஆனால், அவருடன் நெருக்கமானவர்களை எல்லாம் பிரித்துவிட்டனர். முதலில் வெளியேறியது இப்ராஹிம் ராவுத்தர்தான். அவர்களாக பிரிந்தது பாதி.. பிரித்தது பாதிதான் என்று சொல்வேன்.
விஜயகாந்தை அரசியலை நோக்கி செல்ல வைத்தது நாங்கள்தான். என்மீது அவருக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அவர் தேமுதிகவை துவங்கிய பின்னர் நான் அதிமுகவில் இணைந்தேன். அதில், அவருக்கு மிகுந்த வருத்தம். அண்ணன் தப்பு செய்துவிட்டார். அவர் என்னுடன் இருந்திருக்க வேண்டும் என எல்லோரிடமும் சொல்வார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியதே இதற்குத்தான்….46 வருட நண்பர் சொன்ன தகவல்…
ஒருமுறை ஜிவி பிலிம்ஸ் தயாரிக்க, என்னுடைய இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்கவும் வேலை நடந்தது. ஆனால், அதையும் தடுத்தார்கள். நான் அதிமுகவில் இருந்தபோது அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. நான் வேறு கட்சியில் இருந்ததால் அவர் தொடர்பு கொள்ளாமல் இருந்திருக்கலாம். நானும் அதனால்தான் அவரை சந்திக்கவில்லை. சந்திக்க விடவும் இல்லை.
விஜயகாந்தை போல ஒரு நல்ல மனிதரை, மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவரை, தனக்கு கிடைக்கும் புகழை கூட மற்றவர்வர்களுக்கு விட்டு கொடுக்கும் ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. இனிமேல் பார்க்கபோவடும் இல்லை என லியாகத் அலிகான் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..