Categories: Cinema News latest news

இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன்!..சிம்புவின் அதிரடியான முடிவுக்கு காரணம் யாருனு தெரியுமா?..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று மக்கள் மத்தியில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக பத்து தல படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. சிம்பு படம் என்றாலே ஆரம்பத்தில் குடும்பத்தோடு பார்க்க அனைவரும் சங்கட பட்ட நிலையில்

இதையும் படிங்க : அடே இது என்னடா பித்தலாட்டமா இருக்கு… மாமா பையனுடன் தான் பிக்பாஸில் இருக்கிறாரா மைனா?

சமீபகாலமாக குடும்பங்களோடு அனைவரும் வந்து பார்க்க கூடிய அளவிற்கு படம் அமைகிறது அதற்கு காரணமாக இருப்பவர் அவரது தந்தையும் நடிகருமான டி. ராஜேந்திரன் என பயில்வான் ரெங்கநாதன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது டி.ராஜேந்திரன் தான் நடிக்கும் சமயத்தில் எந்த ஒரு ஹீரோயினையும் தொட்டு நடிக்க மாட்டார். அதை அவர் குறிக்கோளாகவே வைத்திருந்தார்.

மேலும் எந்த ஒரு கெட்டப்பழக்கங்களும் இல்லாதவர் கூட. ஆனால் சில நாள்களுக்கு முன்பு டி.ராஜேந்திரன் உடல் நிலை சரியில்லாமல் இப்பொழுது தான் குணமாகியிருக்கிறார். அவரை கூடவே இருந்து கவனித்து வருகிறாராம் சிம்பு. வெளியில் போகாத அளவுக்கு 6 மாதங்களுக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கிறாராம் சிம்பு. மேலும் தன் அப்பா மாதிரியே அவர் வழியை பின்பற்ற போவதாக ஏன் முத்தக்காட்சியில் கூட நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம் சிம்பு என்ற செய்தியையும் பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

Published by
Rohini