More
Categories: Cinema History Cinema News latest news

உலகநாயகன் கமலுக்குப் பிறகு சென்னை பாஷையை சூப்பராகப் பேசி அசத்தும் நடிகர் இவர் தான்..

தமிழ்த்திரை உலகில் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருந்தபோதும் அவர்கள் பெரிய அளவில் வெளிவருவதில்லை. இதற்குக் காரணம் என்ன என்பது யாருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒருத்தர் தான் நடிகர் ஜீவா. இவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்.

ஹியூமர், நடனம், ஆக்ஷன் என அனைத்திலும் இவரது நடிப்பில் ஒரு சின்ன குறும்பு தென்படும். அதே போல் கோபத்தை வெளிப்படுத்தும்போதும் மற்ற நடிகர்களின் மத்தியில் இவர் யதார்த்தமாக வெளிப்படுத்தக்கூடியவர் என்றால் மிகையில்லை.

Advertising
Advertising

தமிழில் ஆசை ஆசையாய் படம் தான் இவருக்கு அறிமுக படம். டீன் ஏஜ் பாய்ஸ்சுக்கே உரிய குறும்பை வெளிப்படுத்தும் படம். அதே போல தித்திக்குதே படத்தில் ரொம்பவே யதார்த்தமாக நடித்து அசத்தியிருப்பார்.

Raam

நடிக்க வந்து 2 ஆண்டுகளில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரிலும் நடித்து அசத்தினார். அதுதான் ராம் படம். இதன் மூலம் தான் எந்த கதாபாத்திரமானாலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். இந்தப் படத்தை ரசிகர்கள் மிகவும் ரசித்துப் பார்த்தனர்.

தொடர்ந்து டிஷ்யூம் படம் வந்தது. இதில் இவர் ஒரு சண்டைக்கலைஞராக ரிஸ்க் பாஸ்கர் என்ற வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

அடுத்து, ஈ, கற்றது தமிழ் படங்கள் வந்தன. இதுவரை தமிழ்சினிமாவில் வராத கதாபாத்திரங்களாக இவை இருந்தன. அதனால் மாறுபட்ட நடிப்பை விரும்பும் ரசிகர்களை இந்தப் படங்கள் கவர்ந்தன.

சென்னை பாஷையை உலகநாயகன் கமலுக்குப் பிறகு ரொம்பவே சூப்பராக பேசியது இவர் தான். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஈ, எஸ்எம்எஸ் படங்களைப் பாருங்கள்.

அதே போல் நவரச நாயகன் கார்த்திக் படங்களைப் போல துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் ஜீவா. இவரது எஸ்எம்எஸ், கோ, நண்பன் படங்களைப் பார்த்தால் இந்த நடிப்பை நாம் ரசிக்கலாம்.

Ko movie

சொல்லப்போனால் வெகு சீக்கிரத்தில் இவர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்து விட்டார். ஆனால் அதுக்கு பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அடுத்தடுத்து அவருக்கு தோல்விப்படங்களே வந்தன. முகமூடி, யான் படங்களைச் சொல்லலாம்.

பெரிய இயக்குனர்கள் படத்தை இயக்கியது தான் மிச்சம். ஆனால் படங்கள் எல்லாம் சொதப்பல்கள் தான். இவை அவரது திரையுலக வாழ்க்கையையே புரட்டி போட்டது. அவர் வர வேண்டிய இடத்துக்கு தனுஷ், விஜய்சேதுபதி இப்போது வந்துவிட்டார்கள்.

அவர் எவ்வளவு தான் திறமையை வெளிக்காட்டினாலும் அவருக்கு தியேட்டர்களில் பாராட்டு கிடைப்பதே இல்லை. இந்த விஷயத்தை ஜீவாவே ஒரு தடவை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

E

ராம், ஈ, கற்றது தமிழ் படங்களை டிவியில் போட்டார்கள். அதன் பிறகு தான் நிறைய பேர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். வித்தியாசமான கதைக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் கம்மி தான். கச்சேரி ஆரம்பம், எஸ்எம்எஸ் படங்களுக்குத் தான் வரவேற்பு அதிகம்.

ரொம்ப கஷ்டப்பட்டு படங்கள் நடிச்சா அவ்வளவு ரீச் ஆகாமல் போகுது. அதே நேரம் கமர்ஷியல் படங்கள் என்றால் நல்லா ரீச் ஆகுது. அதனால தான் இப்போ மசாலா கதைகளைப் பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று சொன்னார்.

நல்ல நடிகர் தான் ஜீவா. ஆனால் அங்கீகாரம் தான் பத்தல. அந்த காரணத்தை இப்போது தான் உணர்ந்துள்ளார் ஜீவா. இனி அவர் நிலையான இடத்தைப் பிடிப்பாரா அல்லது விட்ட இடத்தைப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
sankaran v

Recent Posts