பப்ளி அழகியாக தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரையும் வளைத்து இழுத்துக்கொண்டவர் நடிகை ஷாலினி பாண்டே. அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.

இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். புஸு புஸு அழகியாக இருந்த அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறிவிட்டார். தொடர்ந்து உடற்பயிற்சி, டயட் என எலும்பும் தோலுமாக மாறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது அடையாளம் தெரியாத அளவுக்கு கன்னங்கள் கூட ஒட்டிப்போய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிக்ஸ் பேக் எல்லாம் தெரியுதேமா… இப்படி மாறலன்னு யார் உன்ன கேட்டாங்க? என அவரது தீவிர ரசிகர்கள் வருத்தத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
