Connect with us

Cinema History

கமலின் தோல்விப் படங்களில் இத்தனை சுவாரசியமா? – ஒரு பார்வை

தமிழ்சினிமாவில் வெற்றிப்படங்களும், தோல்விப்படங்களும் புதிதல்ல. ஒரு ஆண்டில் வரும் எல்லாப்படங்களும் வெற்றி அடைவது இல்லை. சில படங்கள் வந்த புதிதில் தோல்வி அடையும். பல வருடங்கள் கழித்து அந்தப்படத்தைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். அந்த வகையில் உலகநாயகன் கமலுக்கும் பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

குணா

1991ம் ஆண்டு தீபாவளியன்று வெளியான படம் குணா. இந்தப் படத்துடன் ரஜினியின் தளபதி படமும் வெளியானது. இதில் தளபதி ஹிட் ஆனது. குணா அந்த அளவில் மெகா ஹிட் இல்லை. ஆனால் கமலின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. இந்தப்படத்திற்காக பிரத்யேகமாக கொடைக்கானல் பகுதியில் யாரும் செல்ல முடியாத குகை ஒன்றைக் கண்டறிந்து படப்பிடிப்பை நடத்தினர். பின்னாளில் இது குணா குகை என்றே அழைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாகி விட்டது.

guna kamal

சந்தானபாரதி இயக்கிய இப்படத்தில் கமலுடன் இணைந்து ரேகா, ரோஷினி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை நாம் மிகவும் ரசிக்கலாம். அந்த அளவு இடங்களும், காட்சி அமைப்புகளும் இருக்கும். மனநலம் பாதிக்கப்பட்டவராகவும், அபிராமி கேரக்டரில் வரும் புதுமுகம் ரோஷினியின் மீதும் அபரிமிதமான காதல் கொண்டும் நடித்து இருப்பார் கமல்.

பாடல்கள் அனைத்தும் தேனாறு பாயும் விதத்தில் இருந்தது. இளையராஜாவின் இன்னிசை படத்திற்குப் பக்க பலம். என்ன காரணத்தாலோ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் தமிழ்சினிமா ரசிகர்கள் காலப்போக்கில் உச்சி முகர்ந்து இன்று வரை கொண்டாடும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கமலுக்கு வழங்கப்பட்டது.

அன்பே சிவம்

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் அன்பே சிவம் படம் பிரமாதமான படைப்பாக வந்த போதும் ரசிகர்கள் மத்தியில் அப்போது பெரும் வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னாளில் இந்தப்படம் இன்று வரை அனைவராலும் பாராட்டப்படும் படமாக அமைந்துள்ளது.

கம்யூனிசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். கமல், மாதவன், கிரண் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்காக மதன் வசனம் எழுதியுள்ளார். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். இந்தப்படத்தில் சுனாமி வருவதற்கு முன்பே அதைப் பற்றி குறிப்பிட்டு இருப்பார் கமல்.

ஹேராம்

2000ல் வெளியாகி சக்கை போடு போடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஹேராம். ஆஸ்கர் விருது பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதை ஓரளவு நிறைவேற்றும் விதத்தில் போட்டிக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. கமலுடன் ஷாருக்கான், ஹேமமாலினி, ராணி முகர்ஜி, கிரீஷ் கர்னாட், நசுருதீன் ஷா, வசுந்தராதாஸ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இந்தப்படம் கொல்கத்தா வன்முறை, மகாத்மா காந்தியின் இறுதி காலம் குறித்து விவாதித்தது. இதில் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. இது ஒரு வரலாற்றுப் படம் என்பதால், இந்தப்படத்திற்காக பழைய கால ட்ராம் வண்டிகள், போன் என பல பொருள்களைத் தேடிப்பிடித்து படமாக்கியிருக்கிறார்கள்.

இந்தப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் வெகுவாக இன்று வரை பேசப்பட்டு வருகிறது. சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை கமல் பெற்ற படம் இது. இந்தப்படமானது ஹங்கேரி நாட்டு பல்கலைக்கழகத்தில் பாடமாக நடத்தப்பட்டு வருகிறதாம். அந்த அளவு இந்தப்படத்தில் டெக்னிகல் விஷயங்கள் உள்ளன. இந்தப்படத்திற்காகத் தான் முதன் முதலில் சிம்பொனி இசை அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆளவந்தான்

aalavanthan kamal

2001ல் வெளியான இந்தப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் படத்தில் இருந்த போதும் நீளமான கிராபிக்ஸ் காட்சி படத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி விட்டது. இந்த காரணத்தால் தான் படம் பிளாப் ஆனது. இந்தப்படத்திற்காக கமல் மொட்டை போட்டும், நிர்வாணமாக நடித்தும் இருந்தார்.

அவருடன் இணைந்து மனிஷா கொய்ராலா, ரவீணா தாண்டன் நடித்து இருந்தனர். இரு மாறுபட்ட கோணங்களில் நடித்து கமல் அசத்தியிருப்பார். சங்கர் மகாதேவன் இசை அமைத்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

மும்பை எக்ஸ்பிரஸ்

Mumbai express kamal

கமல் நடித்து ப்ளாப் ஆன படங்களில் முதன்மையானது இந்த மும்பை எக்ஸ்பிரஸ் படம் தான். கமல் ரசிகர்களையே கடுப்பேற்றிய படம் இது என்றால் மிகையில்லை. படம் வந்து ஒரு வாரம் கூட திரையரங்கில் ஓடவில்லை.

கமலுடன் மனிஷா கொய்ராலா, நாசர், சந்தானபாரதி. பசுபதி, கோவை சரளா, வையாபுரி
உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கிய படம் இது.

google news
Continue Reading

More in Cinema History

To Top