Cinema News
கமலுக்கு கல்கி படத்துக்காக 150 கோடி கொடுத்தது முட்டாள்தனம்… பிரபலம் கதறல்!
கல்கி படம் குறித்தும் அதில் நடித்துள்ள கமல் பற்றியும் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி ஊடகம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கல்கி படத்தைப் பார்க்குற பார்வையாளருக்கு டாஸ்க் என்னன்னா இந்தப் படத்தின் கதை என்னன்னு கண்டுபிடிக்கிறது தான். பத்திரிகையாளருக்கு இந்தப் படத்தைத் காட்டுனாங்க. இந்தப்படத்தைப் பத்திப் பேசும்போது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை சொன்னாங்க. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலவீனம் என்னன்னா திரைக்கதை.
இதையும் படிங்க… இத்தனை பேர் நடிச்சும் ஒன்னும் தேறலயே!.. பிரபாஸுக்கு கை கொடுக்குமா கல்கி?!.. அடப்பாவமே!..
எவ்வளவு சிக்கலான கதையையும் திரைக்கதையில் அழகா சொல்லலாம். அது பார்வையாளனுக்குப் புரியற மாதிரி சொல்லணும். ஆனால் இந்தப் படத்தைப் பொருத்தவரை திரைக்கதையில் மிகப்பெரிய குளறுபடி நடந்துடுச்சு.
அடுத்த விஷயம் சுவாரசியமா சொல்லத் தவறிட்டாங்க. தொழில்நுட்பத்துல இந்திய சினிமாவின் மைல் கல் தான். ஆனால் இவ்வளவு பேரோட உழைப்பு, பணம் இவ்வளவும் செலவழித்து கன்டன்ட்ல கோட்டை விட்டுட்டாங்க.
ஆனால் வசூல் ரீதியாக பார்த்தால் இது தோல்வியாக இருக்காது. ஏன்னா 2 பாகமும் சேர்த்துத் தான் 600 கோடிக்கு எடுத்துருக்காங்க. அதனால தயாரிப்பாளருக்கு பொருளாதார ரீதியாக நஷ்டம் வராது. கமலுக்கு வசூல் ரீதியாக மட்டும் முதல் பகுதியில் காமிச்சி 150 கோடி கொடுத்தாங்கன்னா அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது.
கல்கி படத்தைப் பொருத்தவரை இந்தக் கேரக்டருக்கு கமல் எதற்கு என்று கேள்வி எழுகிறது. அந்தக் கேரக்டருக்கான வெயிட் இல்லை. ஒருவேளை அடுத்த பாகத்தில் அது இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… விஜயை ‘வாடா போடா’ என அழைக்க தயங்கிய திரிஷா!.. ஒரு பிளாஷ்பேக்!..
இந்தப் படத்தைப் பற்றி கமல் சொன்ன மாதிரி இது குழந்தைகளுக்கான படம் தான். ஏன்னா அவங்களுக்குக் கதை தேவையில்ல. காட்சிகள் கிராபிக்ஸ்னு இருக்கறதால அவங்களுக்குத் தான் ரொம்ப பிடிக்கும். கல்கி படத்தைப் பொருத்தவரை குழந்தைகளை அழைத்துச் சென்று படம் பார்க்கும் பெற்றோருக்கு இது தண்டனை கொடுக்குற படம் தான்.
குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் சென்று அவர்களைப் படம் பார்க்க வைத்து விட்டு தூங்கிடணும். இல்லன்னா வெளியே போய் பாப்கார்ன் சாப்பிடணும் என்றும் சொல்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.