Connect with us
kollywood-female-directors

Cinema News

தமிழ் சினிமாவில் படை எடுக்கும் பெண் இயக்குனர்கள்

“எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி” என்ற பாரதியின் புதுமைப்பெண்களாக இன்று பலபேர் ஆண்களுக்குச் சரிநிகர் சமமாக பல்வேறு துறைகளில் கோலூச்சி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழ்சினிமாவிலும் பெண்கள் தன் பங்கிற்கு இயக்குனர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர். அவர்களில் வெற்றியோ தோல்வியோ தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தான் தெரிகிறது.

இவர்களின் படங்களைப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.

1936ல் வெளியான படம் மிஸ் கமலா. இந்தப் படத்தின் இயக்குனர் டி.பி.ராஜலெட்சுமி. இவர் தான் தமிழ்சினிமாவின் முதல் பெண் இயக்குனர். இந்திரா படத்தை இயக்கியவர் சுஹாசினி மணிரத்னம்.

தற்போது சுதா கொங்கரா, புஷ்கர் காயத்ரி, சௌந்தர்யா ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ் என பலர் பெண் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒரு சிலரைப் பற்றி பார்க்கலாம்.

சுதா கொங்கர பிரசாத்

சூரரைப் போற்று, பாவ கதைகள், புத்தம் புது காலை ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் சுதா கொங்கர பிரசாத். இவர் இயக்கிய நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விருதுவிழாவில் 6 சைமா விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

2010ல் விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் நடித்த படம் துரோகி. இந்தப்படம் தான் சுதா கொங்கர பிரசாத்தின் முதல் படம். ஆனால் இறுதிச்சுற்று படத்தில் தான் இவர் பெயர் வாங்கினார். இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவரது திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்றால் அது இறுதிச்சுற்று தான்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

lakshmi-3

 

ஓ மை கடவுளே, ஹவுஸ் ஓனர், திமிரு புடிச்சவன் ஆகிய படங்களை இயக்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் ஏற்கனவே டிவி தொடரில் பிரபலமானவர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…! தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ளார். ஜீ டிவியில் வெளியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பிரபலமானார். பெரும் சர்ச்சைகளையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹலீதா ஷமீம்

ஏலே படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம். பூவரசன்; பீபி படத்தின் இயக்குனர் இவர் தான். இவருக்கு முதல் படமும் இதுதான். தற்போது சமூக கருத்துள்ள திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா தனுஷ்

3 மற்றும் வை ராஜா வை படங்களின் இயக்குனர் இவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ். இவர் தனது கணவர் தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரானார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் 2வது மகள் இவர். வேலையில்லா பட்டதாரி 2, கோச்சடையான், கோவா ஆகிய படங்களை இயக்கினார். கணினி, அனிமேஷன் துறைகளில் புகழ்பெற்றவர்.

கோச்சடையான் படம் தான் இவரை வெளியுலகிற்கு காட்டியது. பின்னர் தனுஷின் விஐபி 2 படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருத்திகா உதயநிதி

kiruthiga070621_1

இவர் காளி, வணக்கம் சென்னை படங்களை இயக்கி உள்ளார். இவரது கணவர் உதயநிதி ஸ்டாலின். நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என படுபிசியாக உள்ளார். வணக்கம் சென்னை படம் இயக்கியதன் மூலம் தமிழ்சினிமாவில் பிரபலமானார். இப்படத்தின் வெற்றிக்குக் காரணம் சுவாரசியமான திரைக்கதையும், பாடல்களும் தான்.

அனிதா உதீப்

இவர் 90 எம்எல் படத்தின் இயக்குனர். 2009ல் வெளியான குளிர் 100 டிகிரி என இவரது படங்களின் தலைப்புகளைப் பார்த்தாலே வேற லெவலில் தான் உள்ளது. தமிழ்சினிமாவில் பல சர்ச்சைகளில் சிக்கியவர். அதன் மூலமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார்.

இவர்களைப் போலவே இன்னும் சில பெண் இயக்குனர்கள் உள்ளனர்.

அவர்களில் மதுமிதா சுந்தரராமன் கே.டி.என்ற படத்தை இயக்கினார். இந்தப்படம் பல விருதுகளை அள்ளியது. இதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். சுஹாசினி மணிரத்னம் இந்திரா படத்தை இயக்கி பிரபலமானார்.

shoba

இவர் இயக்கிய மற்ற படங்கள் புத்தம் புது காலை, பூமராங். அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர். இவர் இயக்கிய நெஞ்சிருக்கும் வரை, நிலாவே வா, ஒன்ஸ்மோர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவர் தனது மகன் விஜயின் தயாரிப்பில் 1990 கால கட்டங்களில் பல படங்களை இயக்கி உள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top