Cinema History
தூக்கத்தில் வந்த நெஞ்சுவலி!.. பதறிய நடிகர் திலகம்!.. அன்னை இல்லம் வீட்டில் நடந்தது இதுதான்!…
பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து நடிகர் திலகமாக மாறியவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர். இவருக்கு பின்னால் பல நடிகர்கள் வந்துவிட்டாலும் அவரை போல நடிக்க ஒருவராலும் முடியவில்லை. எனவேதான், அவரின் சிம்மாசனம் இன்னும் காலியாகவே இருக்கிறது.
சிவாஜி கணேசன் கூட்டு குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். இரண்டு மகன்கள் உள்ளிட்ட உறவினர்களோடு அன்னை இல்லத்தில் வாழ்ந்தவர். அதேபோல், அடிக்கடி திரை பிரபலங்கள் பலரையும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து அழகு பார்ப்பார். அதிலும், அசைவ உணவு விருந்து அவரை போல யாராலும் போட முடியாது என சொல்வார்கள்.
இதையும் படிங்க: சிவாஜி படத்தில் நாகேஷூக்கு வந்த சிக்கல்… ஆனா எம்ஜிஆரோ அந்த விஷயத்துல கில்லாடி..!
ரஜினி, கமல் முதல் பலரும் அப்படி சென்று அன்னை வீட்டில் சாப்பிட்டவர்கள்தான். சிவாஜிக்கு வயதாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்ட பின்னர் அவர் சினிமாவில் நடிப்பதை அவரின் மகன்கள் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விரும்பவில்லை. எனவே, மிகவும் கவனமாக அவருக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தனர்.
வெளிநாட்டில் கூட சென்று அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிவாஜி தங்கியிருந்த அன்னை இல்லத்தில் நிறைய அறைகள் இருக்கும். ஒவ்வொருவரும் தனித்தனி அ|றைகளில் இருப்பார்கள். ஒருமுறை சிவாஜி தூங்கி கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சிவாஜி எந்த இயக்குனரின் காலில் விழுந்து வணங்கினார் தெரியுமா? பராசக்தி நாடகத்துல நடிச்ச ஹீரோயின் இவரா..?!
உதவிக்கு பிரபு மற்றும் ராம்குமாரை அழைத்திருக்கிறார். ஆனால், அவரின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. தட்டு தடுமாறி அவரே எழுந்து அவரின் குடும்ப மருத்துவருக்கு போன் செய்திருக்கிறார். அதன்பின் மருத்துவர் வீட்டிற்கு வந்தபின்னரே மற்றவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது.
அப்போது ‘ஏழை கூட குடும்பத்துடன் ஒன்றாக தூங்குகிறான். அவனுக்கு ஒன்றென்றால் என்ன ஆச்சி என அருகில் இருப்பவர்கள் கேட்பார்கள். எனக்கு அது கூட இல்லை. இப்படி பெரிய வீடா கட்டி வாழாதீங்கடா.. சின்ன வீடா கட்டுங்க.. எல்லாரும் தனித்தனியா இல்லாம ஒன்னா இருங்கடா’ என புலம்பினாராம் நடிகர் திலகம்.