Cinema History
நாசரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த சிவாஜி… அதுக்காக இப்படியா சொல்வாரு நடிகர் திலகம்?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி நடித்த படையப்பா படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. அது கர்நாடகாவின் மேல்கோட்டைப் பகுதி. சிவாஜியும், நாசரும் அந்தக் காட்சியில் இணைந்து நடித்துக் கொண்டு இருக்கின்றனர். அப்போது பிரேக். சிவாஜியிடம் நாசர் தயங்கித் தயங்கி இப்படி கேட்கிறார்.
‘அப்பா எனக்கு ஒரு ஆசை…’ ‘என்ன பாய்?’ என்கிறார் சிவாஜி. ‘கிங் லியர்’ கதையில உங்கள நடிக்க வைக்கணும்னு ஆசையா இருக்கு’ என்கிறார் நாசர். ‘படமா? படமாவா பண்ணப்போற?’ன்னு சிவாஜி அழுத்தமாகக் கேட்க, மெதுவான குரல்ல ‘ஆமாப்பா…’ என்கிறார் நாசர்.
உடனே சிவாஜி இப்படி சொல்லி விடுகிறார். ‘கிங் லியர் கதை எல்லாம் எல்லாருக்குமே புரியாது. எதுக்குத் தேவையில்லாம படம் பண்ணப் போறேங்கற? வேண்டாம்’னு சொல்லிட்டுப் போயிடறாரு.
அதென்ன கிங் லியர்னு பார்த்தா அது ஷேக்ஸ்பியரோட பிரபலமான காவியம். அது பல முறை மேடைகளில் நாடகமாக அரங்கேறியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் ஆன்டனி ஹாப்கின்ஸ் தான் முதலில் அந்தக் கேரக்டரில் நடித்தார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். இது மனிதனோட அத்தனை குணாதிசயங்களையும் சிறப்பா வெளிப்படுத்துற ஒரு கிரேட் கேரக்டர். அந்த வகையில் நாசர் கேட்டதும் அந்தக் கதைக்குத் தான். ஆனால் நடிகர் திலகம் முடியாதுன்னு சொல்லிட்டாரே என நாசருக்கு மன வருத்தமாக இருந்ததாம்.
இதையும் படிங்க… சினிமாவுல வெற்றிடமே இல்லையா… என்ன இப்படி ‘பொசுக்’குன்னு சொல்லிட்டாரு சூரி..!
அன்று மாலை சூட்டிங் முடிந்தது. சிவாஜி கார்ல ஏறப்போறாரு. அப்போ நாசரைப் பார்க்கிறாரு. அவரைக் கூப்பிடுறாரு. ‘படம் எல்லாம் வேண்டாம். நீ ஸ்கிரிப்ட ரெடி பண்ணு. நாம நாடகமா பண்ணுவோம்’னு சொல்ல, நாசரின் கண்களில் இருந்து ஆனந்த அருவி பெருக்கெடுத்ததாம். எவ்வளவு நடித்தாலும் அதில் சற்றும் சலிப்பு இல்லாதவர் தான் நடிகர் திலகம். அதற்குக் காரணம் நடிப்பின் மீது அவருக்கு இருந்த தீவிரமான காதல் தான். அது தான் கிங் லியரிலும் நாம நாடகமா பண்ணலாம்னு சொல்லியிருக்கிறார் சிவாஜி என்றாராம் நாசர்.