Connect with us
Nayagan

Cinema History

நாயகன் படத்துக்கு முன்னோடி எந்தப் படம்னு தெரியுமா? அடேங்கப்பா எங்கே போய் சுட்டுருக்காங்கன்னு பாருங்க…!

உலகநாயகன் கமல், மணிரத்னம் கூட்டணி என்றதுமே நம் நினைவுக்கு வருவது ‘நாயகன்’ படம் தான். இப்போதும் இருவரும் கூட்டணி போட்டுள்ளார்கள். அது தக் லைஃப்.

நாயகன் படம் தமிழ்த்திரை உலக வரலாற்றில் ஒரு மைல் கல். அத்தனை நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்த கமலின் நடிப்பைப் பார்த்து வியந்தனர். யதார்த்தமான மிகையில்லாத அந்த நடிப்பு தான் அத்தனை கண்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு முன்னோடியாக ஒரு படம் இருந்ததாம். அது ஆஸ்கர் விருது வென்ற படம்.

படத்தின் பெயர் ‘தி காட் ஃபாதர்’. இது தான் மாபியா கதை களம் கொண்ட படங்களுக்கு எல்லாம் முன்னோடி. அதாவது அரசுக்கு எதிராக தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ போக்குக் காட்டும். தான் ஒரு தனிக்காட்டு ராஜா என்ற ரீதியில் கெத்தாக வருவாங்க.

அந்த வகையில் தி காட் பாதர் 1972லேயே வந்து விட்டது. படத்தில் மார்லன் பிராண்டோ செம மாஸாக நடித்திருப்பார். படத்தில் அவர் ஒரு மாபியா டானாகவே வாழ்ந்திருப்பார்.

The GF

The GF

அந்தவகையில் தான் கமல் நடித்த ‘நாயகன்’ படமும் வந்து இருக்கிறது. சின்ன வயசிலேயே வன்முறை, ஒடுக்குதல் என பல சவால்களை சந்திக்கிறான் நாயகன். சரி எது, தவறு எது என தன்னோட அனுபவங்கள் மூலமாகவே தெரிந்து கொள்கிறான். அதன்பிறகு தன்னோட செயல்களை அதற்கேற்ப வடிவமைக்கிறான்.

ஆரம்பத்தில் கோபக்காரனாக வந்து, நடுத்தர வயதில முதிர்ச்சி அடைகிறான். அதே நேரம் தன்னோட தரப்பு நியாயத்தையும் விட்டுக் கொடுக்காம ஒரு கெத்தான தந்தையாகவும் மிரட்டுகிறான்.

கதையின் ஓட்டத்தில் கொஞ்சம் கூட தொய்வைத் தராத வகையில் காதல் காட்சிகள் அமைத்திருப்பது இயக்குனரின் ‘டச்’.

இதையும் படிங்க… கல்கி டிக்ட் புக்கிங்!கெ.. சர்வரே திணறிடுச்சி!.. லியோ முதல் நாள் வசூல் ரெக்கார்டுக்கு ஆப்பா?..

காவல்துறையால் தலைகீழாகத் தொங்கவிட்டு அடிப்பது, அடிவாங்கும் கமல் என நம்மைப் படத்தின் துவக்கத்திலேயே ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்குகிறார் இயக்குனர். அது மட்டுமல்லாமல் அடித்த காவலாளியை கழுத்தைப் பிடித்து விடும் கமல், ‘நா அடிச்சா நீ செத்துருவே’ என சொல்கையில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

மகள் ஒரு கட்டத்தில் ‘ஏன் இப்படி மிருகத்தனமா நடந்துக்கறீங்க..?’ன்னு கேட்கும்போது ‘வாக்கு கொடுத்துட்டேன்’னு சொல்லும்போது கமலைத் தவிர வேற யாராலும் அப்படி ஒரு நடிப்பைத் தர முடியாது.

google news
Continue Reading

More in Cinema History

To Top