பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு கிடைத்த கெளரவம்…. ரசிகர்கள் ஹாப்பி…..

Published on: December 3, 2021
pandian stories
---Advertisement---

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. காரணம் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசம் மற்றும் கூட்டு குடும்பத்தை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருவது தான்.

இந்த சீரியலுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளார்களோ அதேபோல் இந்த சீரியலில் நடிக்கும் சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் என்றால் அது நடிகர் குமரன் தான். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூன்றாவது தம்பியாக கதிர் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

கதிருக்கு பேன்ஸ் ஆர்மியே உள்ளது. இவரது அமைதியான குணம் மற்றும் அழகான முகபாவனைகளுக்காகவே ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். அதிலும் கதிர் முல்லை ஜோடி இணையத்தில் மிகவும் பிரபலமாகும். கதிர் ஒரு நடிகர் என்பதை விட சிறந்த டான்ஸர் என்பது தான் உண்மை.

kumaran
kumaran

இவர் மானாட மயிலாட 4 மற்றும் 5 வது சீசன்களில் பங்கேற்று நடனம் ஆடியுள்ளார். இப்படி நடனம், நடிப்பு என இரண்டிலும் கெத்து காட்டி வரும் குமரன் 2021 ஆம் ஆண்டுக்கான ???????????? ???????????????????? ???????????????????????? ???????????????????? நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குமரன், “நாம ஜெயிச்சா ஆடப்போறதில்ல தோத்துட்டா வாடிரப்போறதில்ல எண்ணம்போல் மட்டுமே வாழ்க்கை” என பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment