More
Categories: Cinema History Cinema News latest news

பிரபுதேவா ஆடுவார் தெரியும்!.. பாடுவாரா?.. இவ்வளவு பாடல்களா?!.. ஆச்சர்ய தகவல்…

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுபவர் நடன புயல் பிரபுதேவா. இவர் பிரபல நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். இவருக்கு பிரபல நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் என இரு சகோதரர்கள் உள்ளனர். நடன ஆசிரியராக பல படங்களில் பங்காற்றினார். பின்னர் ”இந்து”என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு முழுநேர காதாநாயகனாக வலம் வந்தார்.

prabhu deva

பின்னர் இயக்குனர் அவதாரம் எடுத்து ”போக்கிரி”,”வில்லு” போன்ற பல படங்களை இயற்றினார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார். இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட இவர் தமன்னாவுடன் இணைந்து நடித்த ”தேவி” திரைப்படம் மற்றும் ஜெயம் ரவி,அரவிந்த்சாமியின் கூட்டணியில் உருவான ”போகன்” ஆகிய இரு திரைப்படங்களையும் தனது சொந்த நிறுவனமான ”பிரபு தேவா ஸ்டுடியோஸ்” மூலம் தயாரித்தார். இப்படி நடனம்,நடிப்பு,இயக்கம் மற்றும் தயாரிப்பை தாண்டி பின்னணி பாடகராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

Advertising
Advertising

prabhu deva

1999 ஆம் ஆண்டு ஒரே நாளில் எடுக்கப்பட்ட கின்னஸ் சாதனை படைத்த படம் “சுயம்வரம்” இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் வெளிவந்த பாடல் ”சிவ சிவ சிவ சங்கரா” இப்பாடலுக்கு நடனம் அமைத்தும் நடித்தும் இருப்பார். அப்பாடலை முழுமையாக தனியாக பாடியவர் பிரபுதேவா. பின்னர் ”உள்ளம்கேட்குமே” என்னும் திரைப்படத்தில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடகர் மனோ பாடிய ”கிங்குடா அண்ணே கிங்குடா” இப்பாட்டில் மனோ உடன் ஆங்காங்கே இணைந்து பாடியிருப்பார். இவ்விரு திரைப்படங்களுக்கு முன்னரே விக்ரம்,அஜித் இணைந்து நடித்த ”உல்லாசம்” திரைப்படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் ”வாலிபம் வாழச்சொல்லும்” எனும் பாடலில் வரும் சிறிய ராப் பகுதியை பிரபுதேவா பாடியிருப்பார்.

Published by
Sathish G