
Cinema News
புள்ளைகளும் வளர்ந்துடும்.. படாதபாடு படும் சுந்தர் சி.. மூக்குத்தி அம்மனுக்கே சிக்கலா?
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பொள்ளாச்சி செட்யூலை 20 நாள்கள் பிளான் பண்ணினாராம் சுந்தர் சி. ஆனால் அங்கு அனுமதி வாங்குவதில் சின்ன சிக்கல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மூன்று நாட்கள் மட்டும் அனுமதி கிடைத்திருக்கின்றது. மீதி நாட்களுக்கு அனுமதி கிடைக்கவில்லையாம். இன்னொரு பக்கம் அதில் ஊர்வசிக்கு மிக முக்கியமான கேரக்டர்.
ஏற்கனவே முதல் பாகத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். திடீரென ஊர்வசிக்கு மூட்டு வலியாம். அதனால் அவ்வளவு தூரம் என்னால் டிராவல் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாராம் ஊர்வசி. இன்னொரு பக்கம் இந்த படத்தில் வில்லனாக துனியா விஜய் அவர்தான் நடிக்கிறார். அவருடைய தேதியிலும் ஒரு குழப்படி இருந்திருக்கிறததாம். இதையெல்லாம் கருத்தில் கொண்டு சுந்தர் சி இதெல்லாம் வேண்டாம் .
இவ்வளவு சிக்கலோடு பொள்ளாச்சிக்கு போக வேண்டாம். இரண்டாவது செட்யூலை சென்னையில் பிளான் பண்ணினார்களாம். அதை அப்படியே மாற்றி விட்டு முதலில் சென்னையை முடித்துவிட்டு அப்புறமாக பொள்ளாச்சியை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறாராம் சுந்தர் சி. இதற்கு இடையில் சுந்தர் சி இப்படி மாற்றியதற்கு இன்னொரு பிளானும் இருக்கிறதாம்.
ஏற்கனவே வடிவேலுவை வைத்து ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஏப்ரல் 24 கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. அந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு சேனலிலும் போய் உட்கார்ந்து படத்தை பற்றி அவர் பேச வேண்டும். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தால் புரமோஷன் வேலையையும் இங்கேயே முடித்து விடலாம்.
பொள்ளாச்சியில் இருந்து கொண்டு எப்படி பேச முடியும். அதனால் இரண்டையும் ஒரே வேலையாக முடித்து விடலாம் என்று சுந்தர் சி எண்ணி இருக்கிறாராம். இந்த செய்தியை கேட்டவுடன் உடனே நெட்டிசன்கள் நயன்தாராவை வம்புக்கு இழுத்திருக்கின்றனர் .இதையெல்லாம் முடிக்கிறதுக்குள் நயன்தாராவின் குழந்தைகளும் வளர்ந்து விடும். ஏனெனில் குழந்தைகளை காரணம் காட்டி தான் நயன்தாரா வெளியூர் ஷூட்டிங் வருவதற்கு தயங்குகிறார் .இதுவும் ஒரு வகையில் நல்லது தான் என கூறி வருகின்றனர்.