Connect with us

ரஜினியின் முதல் படம் முதல் சீன்… அட இத்தனை பாடங்களை சொல்கிறதா?

rajni

Cinema History

ரஜினியின் முதல் படம் முதல் சீன்… அட இத்தனை பாடங்களை சொல்கிறதா?

முதல் படம், முதல் சீன் என்றால் எப்பேர்ப்பட்ட நடிகருக்கும் நினைவு இருக்கும். அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள். பெரும்பாலும் கஷ்டப்பட்டுத் தான் சினிமாவுக்குள் நுழைந்து இருப்பார்கள். ஆனால் அதுவே அவர்களுக்குப் பாடமாகவும் அமையும்.

அபூர்வ ராகங்கள் படத்தில் ஒரு இரும்புக் கதவைத் திறந்து கொண்டு தமிழ்சினிமா உலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் ரஜினிகாந்த். அந்தப் படத்திலே வாய்ப்பு கிடைத்த போது இது ஜஸ்ட் ஒரு வாய்ப்புன்னு நினைச்சீங்களா, இல்ல இது வாழ்க்கைன்னு நினைச்சீங்களான்னு ஒரு பத்திரிகை நிருபர் ரஜினியிடம் கேட்டார்.

எப்படி அதை வாய்ப்புன்னு நினைக்க முடியும்? இதை என்னுடைய வாழ்க்கைன்னு நினைச்சிட்டுத் தான் அந்தக் கதவைத் திறந்தேன். ஏன்னா என்னோட சினிமா, டிராமான்னு இருந்த ஆர்வத்துல இந்த பஸ் கண்டக்டர் வேலையில இருந்து என்னைத் தூக்கி எறிஞ்ச நேரம் அது. இப்படி ஒரு வாழ்க்கை அமையும்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல. எவ்ளோ தூரத்தைக் கடந்து வந்துட்டேன்னு அந்த நிருபருக்கு சர்வ சாதாரணமாக பதில் சொன்னார் ரஜினி.

அப்படி அவர் சாதாரணமாக சொன்னாலும் அதுக்குப் பின்னால எவ்ளோ உழைப்பு இருக்கு? எவ்வளவு போராட்டங்களை எல்லாம் சந்திச்சிட்டு வந்துருக்கேன் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதற்கெல்லாம் ஆதரவாக இருந்தது எதுன்னா அந்த இரும்பு கதவைத் திறக்கும்போது இதுதான் என்னோட வாழ்க்கைன்னு நினைச்சிக்கிட்டு அதைத் தீர்மானித்துக் கொண்டு திறந்தாரே. அதுதான் இங்கே ரொம்ப முக்கியமான விஷயம்.

அதுதான் இந்த எதிர்ப்புகளை எல்லாம் சந்திக்கின்ற வலுவையும் பல பிரச்சனைகளை சந்திக்கின்ற போராட்ட குணத்தையும் ரஜினிக்குக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதை யாரால் அறிய முடியும்?

To Top