More
Categories: Cinema News latest news

வெந்து தணிந்தது காடு படம் புதுமுகம் பண்ண வேண்டிய படம்….நான் அதை சவாலா எடுத்து செய்தேன்…சிம்பு

விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு மிகச்சிறந்த காதல் ஓவியம். திரிஷா ஜெர்சி என்ற கேரக்டரில் பிரமாதமாக நடித்து இருந்தார். இவரைச் சுற்றியே கதை நகரும். வெகு நேர்த்தியாக காட்சிகளை அழகுற இயக்கியிருந்தார் இயக்குனர் கௌதம் மேனன். இவரது இந்தப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. வெற்றிகரமாக ஓடியது. சிம்புவிற்கு மிகப்பெரிய பேர் வாங்கிக் கொடுத்த படங்களுள் இதுவும் ஒன்று. அடுத்த படம் என்று பார்த்தால் அது வெந்து தணிந்தது காடு படம் தான். இது டோட்டலி டிபரண்ட் மூவி. சிம்பு நடிப்பில் பட்டையைக் கிளப்பியுள்ளார். மாநாடு வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் இந்தப் படம் உருவானதால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளானது. படத்தைப் பற்றி சிம்பு என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

எனக்கு நிறைய பேர் இருக்கு. சிம்பு. சிலம்பு. சிலம்பரசன். எஸ்.டி.ஆர்…னு. அப்ப வந்து ரொம்ப ஸ்பீடு…ஒரு எனர்ஜி…ஒரு ஃபயர்…இருக்கும். ஆனா நாம எங்க போறோம்னு தெரியல. இப்ப ஒரு அமைதி ஒரு மெச்சூரிட்டி வந்துருக்கு. அப்போ அடுத்து என்ன பண்ணனும்…அடுத்து என்ன பண்ணனும்னு தான் யோசிப்பேன். இப்போ தமிழ்சினிமா மேல ஒரு ரெஸ்பான்சிபிளிட்டி வருகிறது.

Advertising
Advertising

என் மேல நிறைய விமர்சனங்கள் எழுந்தது உண்மைதான். நாம போயி எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டே இருக்க முடியாது. வெந்து தணிந்தது காடு படம் வந்து ஒரு புதுமுகம் பண்ண வேண்டிய ஸ்கிரிப்ட். அவனுடைய லைஃப் ஜர்னி…அது ஒரு யங்ஸ்டரா அந்த மாதிரி மூடுல இருக்குறவங்க தான் பண்ணனும். பட் எனக்கு என்னன்னா நான் இதை சவாலா எடுத்துக்கிட்டு செய்யணும்னு ஆசை.

vtk simbu2

மாநாடு படம் டோட்டலி டிபஃரண்டு. நிறைய பேரு அந்த ஸ்கிரிப்ட ஒத்துக்கவே இல்ல. சம்திங் ஏதாவது வித்தியாசமான ஒண்ணு. ஆனா கமர்ஷியலி இது ஒர்க் ஆகும்னு எனக்கு நம்பிக்கை இருந்தது.

சோ இந்தப்படமும் அந்த மாதிரி தான். நான் ஒரு பெரிய ஸ்டார். எஸ்டிஆர். எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அப்படின்னு எந்த ஒன்றையும் மனதுக்குள் வச்சிக்காம ஒரு புதுப்பையனா நான் நடிச்சேன்னா எப்படி இருக்குமோ அந்த ஃபீல்ல தான் நான் நடிச்சேன்.

vtk 22

என்னோட சைடுல இருந்து தமிழ்சினிமாவுல எதாவது ஒரு பங்களிப்பு இருக்கணும்னு நினைப்பேன். நான் இப்ப ஒரு சைக்கிள் வாங்கிட்டேன். எனக்கு மோட்டார் சைக்கிள் பார்க்கும்போது சைக்கிள் கம்மியா இருக்கும்.

அப்புறம் கார் வாங்கிட்டேன்னா மோட்டார் சைக்கிள் கம்மியா இருக்கும். சோ அது எனக்கு சின்ன வயசுலயே புரிஞ்சிருச்சி. நான் ஹாலிவுட்டுக்கே போயி நடிச்சிட்டேன்னு வச்சிக்கங்க. ஒரு பேச்சுக்கு சொல்றேன்.

எங்க இருந்தாலும் சரி. மக்கள் இப்ப என்ன நினைக்கிறாங்கன்னா….நம்ம ஒரு பெரிய ஆளா ஆயிடணும்…பெரிய ஆளா ஆயிடணும்னு. பெரிய ஆள்னா யார்? யார் ஒருத்தர் அவரவர் வேலையை பெர்பெக்டா செய்றாங்களோ அவங்க தான் பெரிய ஆள். அதைத் தான் நான் எப்பவும் நம:புவேன்.

Published by
sankaran v

Recent Posts