More
Categories: Cinema News latest news

10 நிமிட சீனுக்கா இத்தனை கோடியா?… அடங்காத வெங்கட் பிரபு!. தளபதி 68 அப்டேட்!..

Thalapathy68: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி68 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக பார்க்கப்பட்ட விஜயின் டிஏஜிங்காக படப்பிடிப்புக்கு முன்னரே படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் கிளம்பிய செய்தி தான். அதுகுறித்த மேலும் சில சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

கல்பனா எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விஜயுடன், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க:நான் எப்ப அவர் மாதிரி ஆகுறது!. நடிகையிடம் புலம்பிய ரஜினிகாந்த்.. இவ்வளவு நடந்திருக்கா?!..

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை ஜனவரி முதல் நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு சமீபத்தில் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு முன்னரே படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றது. இப்படம் டைம் டிராவல் படமாக உருவாக்கப்பட்டு வருவதால் விஜயின் 90ஸ் லுக்கை ரீ க்ரியேட் செய்ய படக்குழு முடிவு செய்தது. அதில் விஜய் இரண்டு கேரக்டரில் நடிப்பதால் அப்பா கேரக்டராக அது இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நிச்சயம் முடிந்த பெண்ணிடம் ஏடாகூடமா பேசிய சந்திரபாபு… மானத்தை வாங்கிய பெண்ணின் தந்தை…

Published by
Akhilan

Recent Posts