100 பேர் வந்தாலும் நான் ரெடி!.. மேடையில் நடிகரிடம் ஓப்பன் சாலேஞ்ச் விட்ட லோகேஷ்!..
இயக்குனர்களில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் லோகேஷ். இளம் இயக்குனர்களில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் சினிமாவில் சாதிக்க துடிக்கும் இயக்குனர்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார்.
சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்ற சொல்லே லோகேஷ் வந்த பிறகு தான் மிகவும் பிரபலமானது. அந்த அளவுக்கு சிறு வயது என்றாலும் பல நடிகர்களை ஒரே ஃப்ரேமில் காட்டுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.
இப்படி இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வரும் லோகேஷை மேடையில் ஜெய்பீம் நடிகர் மணிகண்டன் வெறுக்கிற மாதிரியான சில பேச்சுக்களை பேசியிருக்கிறார். அதாவது ஆனந்த விகடன் இருந்து ஜெய்பீம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு கொடுக்க ஆனால் சூர்யாவோ அதை வாங்கிக் கொண்டு இதற்கு பொருத்தமானவர் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் தான் என்று அவருக்கு கொடுத்தார்.
விருதை வாங்கிய மணிகண்டன் ‘ நான் கமல் சாரின் தீவிர வெறியன், அவர் பேசிய வசனங்களை அப்படியே தலைகீழாக கூட சொல்வேன், அந்த அளவுக்கு கமல் சார் எனக்கு உயிர், அவரை யாருக்காவும் விட்டுக் கொடுக்க மாட்டேன், அவர் மீது அவ்ளோ பொஸஸிவ்’ என்று சொல்லிவிட்டு,
‘ஆனால் எனக்கே உரிய கமல் சாரை லோகேஷ் கொண்டாடுவது ஒரு மாதிரியாக இருக்கிறது, லோகேஷும் கமல் சாரின் ரசிகர் என்று சொல்லும் போது எனக்கு லோகேஷை அடிக்கனும் என்று தோன்றுகிறது, அந்த அளவுக்கு கமல் சாரை எனக்கு பிடிக்கும்’ என்று கூறினார். அதே மேடையில் மற்றொரு விருதை வாங்கிய லோகேஷ் மணிகண்டனுக்கு பதிலடி கொடுத்தார்.
அதாவது ‘ நான் கமல் சாரை பற்றி பேசும் போது வெறுக்கிறதாக சொன்ன மணிகண்டனுக்கு ஒன்று சொல்கிறேன், நானும் படங்கள் பண்ணுகிறேன், மணிகண்டனும் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். அதே நேரம் ஒரு மணிகண்டன் இல்லை 100 மணிகண்டன் வந்தாலும் எந்த மேடையிலும் நானும் கமல் சாரை விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று ஓப்பனாக சேலஞ்ச் விட்டார்.