Connect with us

Cinema History

11வித கெட் அப்புகளில் நடித்து அசத்திய மகாநடிகர் யார் தெரியுமா?

எம்ஜிஆர் படங்களில் முக்கிய வில்லனாக வருபவர் யார் என்று கேட்டால் டக்கென்று சொல்லிவிடலாம் நம்பியார் என்று. அந்த அளவு அவர் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டார்.

அந்தக் காலத்தில் பயங்கர வில்லனாக தமிழ்சினிமாவில் வலம் வந்தவர் இவர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? என எம்ஜிஆரையே தனது கம்பீரக்குரலில் அதிர வைப்பார்.

ஆரம்பகால கட்டத்தில் நாடக சபாக்களில் தான் நடித்து வந்தார். இவர் நடித்த கவியின் கனவு என்ற நாடகத்தில் இவர் பேசிய வசனம் இவரை திரை உலகுக்கும் வில்லனாகக் கொண்டு வரக் காரணமானது.

அந்த நாடகத்தில் இந்த நாட்டு மக்கள் செம்மறி ஆட்டு மந்தைகள் என்று கம்பீரமான குரலில் பேசி அசத்தியிருப்பார். அக்காலத்தில் இந்த வசனம் பரபரப்பாகப் பேசப்பட்டது.

வித்யாபதி படத்தில் காமெடி நாயகனாக நடித்து அசத்தினார். எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் கதாநாயகர்களுடன் வில்லனாக வந்து மக்களை மிரட்டினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடித்து அசத்திய நம்பியார் பற்றி இன்னொரு ருசிகர தகவல் உண்டு. ஆம். இவர் ஆங்கிலப்படத்தில் கூட நடித்துள்ளார். படத்தின் பெயர் ஜங்கிள்.

கோடைகாலத்தில் இவர் ஊட்டி செல்வது வழக்கம். அப்போது குடும்பத்துடன் சென்று அங்கு தங்கி அங்குள்ள இயற்கை அழகை ரசித்தவாறு ஓய்வெடுப்பாராம். அப்போது படப்பிடிப்பிற்கு எவ்வளவு வற்புறுத்தி அழைத்தாலும் ஒப்புக்கொள்வதில்லையாம் நம்பியார்.

நம்பியார் தீவிர ஐயப்ப பக்தர் என்பது நமக்கு எல்லாம் தெரியும். சபரிமலைக்கு மட்டும் 65 தடவைக்கும் மேல் பாதயாத்திரை சென்றுள்ளார். அதுமட்டுமா இவர் தான் சிவாஜி, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ராஜ்குமார் என பலருக்கும் குருசாமி.

இவர் சாப்பாட்டில் சைவம் தான். அதுவும் வெளியில் படப்பிடிப்பு என்றால் எங்கும் சாப்பிடுவதில்லையாம். எங்கு சென்றாலும் மனைவி ருக்மனியின் சாப்பாடு தான். அதனால் தான் படப்பிடிப்பு அவுட்டோரில் என்றால் கூடவே மனைவியையும் உடன் அழைத்துச் சென்று விடுவாராம்.

அது சரி. இன்னும் தலைப்புக்கான கேள்விக்குப் பதில் வரவில்லை என்கிறீர்களா? ஆம். எம்.என்.நம்பியார் 11 வேடங்களில் ஒரு படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதை வேடம் என்று சொல்வதை விட கெட் அப்புகள் என்று சொல்லலாம்.

மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற புகழ் பெற்ற நிறுவனம் தயாரித்தது. படத்தின் பெயர் திகம்பர சாமியார். டி.ஆர்.சுந்தரம் இயக்கினார். நம்பியாருடன் பி.வி.நரசிம்ம பாரதி, டி.பாலசுப்பிரமணியம், வி.கே.ராமசாமி, எம்.எஸ்.திரௌபதி, லலிதா, பத்மினி, குமாரி கமலா உள்பட பலர் நடித்துள்ளனர்.

mn nambiyar 3

1960ல் இந்தப்படம் வெளியானது. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நீண்ட பல்லுடன் வித்தியாசமான வில்லன் ரோலில் நம்பியார் எம்ஜிஆருடன் நடித்து மிரட்டியிருப்பார்.

ராஜகுமாரி என்ற படத்தில் தான் முதன் முதலாக எம்ஜிஆருடன் சேர்ந்து நடித்துள்ளார். ஒரு வில்லனுக்கு இத்தனை வரவேற்பா தமிழ்சினிமாவில் என்று பலரும் ஆச்சரியப்படலாம். இவர் பேசும் வசனங்கள் கதநாயகர்களுக்கே சவால் விடும் வகையில் பஞ்ச் வசனங்களாக இருக்கும். அதனால் தான் இவர் தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top